
நாங்கள் நினைத்தது போல் ஏராளமான மக்கள், பல மகிழுந்திகள், மலை நிறைய 3 இன்ச் அளவுக்கு பனி என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது சு.க. விசாரித்ததில் ஒரு வாரம் முன்பு 2 இன்ச் அளவில் பனியிருந்ததாகவும், சில நாட்களாக பெய்த மழையில் எல்லாம் கரைந்து விட்டதாக கூறினர். சரி, பனியில்லாட்டி என்ன, என்று மனதை தேற்றிக்கொண்டு, அனைவரும் அந்த இடத்தை சுற்றி ஒரு வலம் வந்தோம். அங்கு ஓரமாக ஒரு பெரிய அரிசி மூட்டை அளவில் இருந்த பனியை எடுத்து விளையாடி விட்டு, கிளம்பினோம், நாங்கள் மட்டும் அப்படியில்லை, அங்கு வந்திருந்த இந்த ஊர்காரர்களும், எங்களைப் போல், இருந்த துக்குளியூண்டு பனியில் விளையாடினர், அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கத்தானே செய்கிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பி North Bend என்னும் வணிக வளாகம் சென்றோம். வாங்குகிறோமோ இல்லையோ பல கடைகள் ஏறி இறங்கினோம், சில கடைகளில் வாங்கினோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேறு கடைகளை சுற்றி விட்டு ஒரு இந்திய உணவகத்தில் தோசை, கொத்து பரோட்டா என்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். பார்த்த (?) இடத்தை விட பயணம் நன்றாக இருந்தது, We enjoyed the drive.
கடந்த வாரம் பதிவர் அனன்யா பல்பு வாங்கிய அனுபவங்களை பற்றி பதிவு எழுதியிருந்தார், இது நான் வாங்கிய பல்பு. இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே.
3 comments:
இப்போதெல்லாம் உங்கள் பக்கங்கள் படிப்பதற்கு மிகவும் Crispபாக இருக்கிறது. சுவையான தகவல்களை நல்ல தரமான படங்களுடன் விளக்குவதால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது
இது போன்ற பதிவுகள் நிறைய எழுதவும்
வானிலை சரிபார்த்த நீங்கள் கொஞ்சம் சு . க வின் நிலை பற்றி இணையத்தில் சரி பார்திருக்கலாம்
சரி நாம் இப்படி பல இடங்களுக்கு போன பொது ஏன் உனக்கு அதை பதிவிட தோன்றவில்லை ?
அப்பவெல்லாம் நான் வலைப்பூவே ஆரம்பிக்கல, இப்ப தான் கொஞ்ச நாளா பதிவு போட்டிட்டு இருக்கேன், அதான் அதெல்லாம் பதிவிடவில்லை. அடுத்த தடவை நாம போகும் போது, கண்டிப்பாக அதைப்பதிவிடுவேன்.
Post a Comment