தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரிய இருந்து ஓய்வு பெற்று, தற்போது பவானி லட்சமி நகரில் வசித்து வரும் திரு பெ.முத்துசாமி அவர்கள் எழுதிய நூல் தான் "தமிழ் எழுத்து சீர்திருத்தம் -1 ஓர் எளிய முறை". சமீபத்தில் என் தந்தை மூலம் இப்புத்தகம் எனக்கு கிடைத்தது. இவருடைய உண்மையான தமிழ் பற்றிற்கு தலை வணங்குகிறேன்.
இந்நூலை ஆசிரியரே பதிப்பித்து இருக்கிறார், கண்டிப்பாக கடைகளில் கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் இந்நூலில் திரு பெ.முத்துசாமி அவர்கள் குறிப்பிடும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்ன என்பது பற்றியே இந்தப் பதிவு.
அவசியம் என்ன?
தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தற்கு அவர் கூறும் காரணங்கள்
1. சில எழுத்துக்கள் குழந்தைகள் எழுதி பழகுவதற்கு கடினமாக இருக்கிறது.
2. தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.
தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் குறித்து டாக்டர் மு.வ. இப்படி குறிப்பிடுகிறார்
"தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் அவற்றைச் சிறிது மாற்றியமைக்கு வேண்டும். இந்த வகையான மாற்றம் கருதிய சீர்திருத்தம் செய்யும்போது கண் மூடித்தனமாக பழமைப்பற்று, மொழிப்பற்று என்ற பெயராலும் குறுக்கிடலாகாது"
இந்நூலில் அவர் முதலில் குறிப்பிடும் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து நூலில் உள்ளபடியே கீழே.
'உ' கர மற்றும் 'ஊ' கார எழுத்து குறியீடுகள் மாற்றப்படவேண்டும்
இப்போது 'கு' என்ற எழுதுவதை 'க' மட்டும் எழுதிப் பக்கத்தில் 'கு'வில் உள்ள வளைவில் பாதியைப் பிறை சந்திரன் வடிவில் ()) சேர்த்துவிடலாம், அதாவது 'கு'விற்கு பதில் 'க)'. இது எழுதுவதற்கும் மற்ற அச்சுப் பொறிகளுக்கும் இது எளிதாகவே இருக்கும். 'க' முதல் 'ன' வரை உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் இந்த ஒரே மாதிரியான குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
கூ வரிசையான நெடில் எழுத்துக்களுக்கு இதே கொம்பை திருப்பி போட்டு (() நெடில் ஆக்கி விடலாம். அதாவது 'கூ'விற்கு பதில் 'க('.
கீழ் மேல் உள்ள கொம்புகளை பக்கவாட்டில் சேர்த்தல்:
ஆ, இ, கு, சூ, ஞு, டு, ணு, ரு, லு, னு போன்ற கீழ் வளைவுகள் தட்டச்சுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தவிர்க்க உகர ஊகாரப் புதிய குறியீடுகள் ), ( இரண்டையும், ஏற்றுக் கொண்டால் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்துக்கும் இச்சிக்கல் தீர்ந்து விடும். மீதம் இருப்பது ஆ மற்றும் இ. 'ஆ'வை இப்படியும் இ யை இப்படியும்
எழுதலாம் என்கிறார்.
ஊ, ஐ, ஒ, ஓ, ஒள
உயிர்மெய் உகர ஊகார வரிசைகளைப் போலவே ஊ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளையும் குழந்தைகள் எழுதிப் பழக நீண்ட நாட்களாகின்றன. அவற்றையும் சற்று எளிமைப்படுத்தினால் குழந்தைகளுக்கு மனப்பாரம் குறையும், கைப்பழக்கமும் விரைவாக வரும்.
கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு முடிய (அ) 3 என்பதை 'இ' என்ற எழுத்தாக இருந்துள்ளது. இப்போது இது பழகத்தில் இல்லை, அதனால் 3 என்பதை 'ஒ' வாகவும் என்பதை 'ஓ' நெடிலாகவும் என்பதை 'ஒள' என்பதாகவும் இப்போது ஏற்றுக் கொண்டால் குழந்தைகளும், தமிழ் எழுத்தை புதிதாக கற்பவர்களும் எளிதாக கற்றுக் கொள்வார்கள். உருவத்திலும் ஓரளவு பழைய எழுத்துக்களைப் போலவே இருக்கும். அடுத்து ஊ என்பது 2 எழுத்துகளாக உள்ளதுடன் பெரியதாகவும் உள்ளது, இதனைச் சுலபமாக்க 'எ' குறிளின் அடியில் ஒரு சாய்வு கோடு சேர்த்து 'ஏ' நெடில் ஆக்குவது போல் 'உ' குறிலின் கடைசியில் அதே போல் ஒரு சாய்வு கோடு சேர்த்து நெடில் ஆக்கிவிடலாம்.
முடிவில் எழுத்து சீர்திருத்தம் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்.
தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ் அறிஞர்களும், உலகத் தமிழ் அமைப்புகளும் கூடிக் கலந்து பேசிப் பல மாநாடுகளை நடத்தி அரசுக்குப் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்தி வழி காண்பது மிகவும் அவசியமும் அவசரமும் ஆனதாகும்.
இது கணினி யுகம், தொலைக்காட்சி யுகம். எனவே மாறுதல்களை ஏற்றுக் கொள்வதில் வேகம் இருக்கும். மாறுதல்களை வலியுறுத்துவோர் தான் இப்போது தேவை.
திரு முத்துசாமி தன் கட்டுரையை முதலவருக்கு அனுப்பியிருக்கிறார், பரீசீலிப்பதாக பதில் அனுப்பியிருக்கிறது தமிழ் வளர்ச்சித் துறை.
1 comment:
இதைத்தான் கொக்குத் தலையில் வெண்ணை வைப்பது என்று சொல்வார்கள். அச்சுத்துறைக்கும் கணிணித் துறைக்கும் ஏற்ப மாறுதல் தேவை என்று சொல்லிக் கொண்டு இப்படி ஒரு வேண்டாத மாறுதலைச் செய்யத் தேவையே இல்லை. எத்தனை பத்திரிகைகளில் அச்சுக் கோக்க கடினமாக உணருகிறார்கள்? நாள் தோறும் வேளைக்கு ஒன்று என நாளேடுகள் அச்சாகிக் குவிகின்றனவே! இப்போதுள்ள முறையிலேயே தொடர்வதுதான் சரி.
Post a Comment