கதம்பம் என்ற தலைப்பில் வேறு பதிவர்களும் எழுதிக் கொண்டிருப்பதால், இத்தலைப்பை மாற்ற நினைத்தேன். நல்லதாக ஒரு தலைப்பும் தோன்றவில்லை, அதனால் இப்பகுதிக்கு நான் "இந்த வாரம்" என்ற தலைப்பில் எழுதுகிறேன். வேறு ஏதும் தலைப்பு தோன்றினால் சொல்லுங்கள்.
தமிழக அரசியல்:
இந்த வாரம் பெரிய மாற்றம் இல்லை.
பா.ம.க மூன்றாவது கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ். அடுத்த வாரம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
30-40 தொகுதிகளுக்குகெல்லாம் கூட்டணி அமைக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த். கூட்டணி பேசும் கட்சிகளிடம் அதிகமா தொகுதிகள் வேண்டும் என்று மறைமுகமாக கேட்கிறாரா?
இந்த வார விளையாட்டு:
பாகிஸ்தான் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்சிங் பிரச்சனையை தோண்டி கொண்டிருகிறார்கள், யாசிர் ஹமீது அளித்த தகவல், ஆஸ்திரேலியா தொடரிலும் ஃபிக்சிங் என சில பூதங்கள் வந்துகொண்டிருகின்றன. பாகிஸ்தானில் அரசியல் மற்றும் விளையாட்டு எதில் ஊழல் நடந்தாலும் விளையாட்டாகவே எடுத்துகொள்கின்றனர்.
யு எஸ் ஓபன் விறு விருப்பாக நடந்த கொண்டிருக்கிறது. முன்னணி ஆட்டக்காரர்களில் ஆண்களில் முர்ரேவும், பெண்களில் டேமன்டிவாவும் தோற்றுவிட்டனர். இரட்டையர்கள் போட்டியில் நம்மவர்கள் பயசும் மற்றும் பூபதியும் தோற்று வெளியேறிவிட்டனர், போப்பண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியிருகின்றனர்.
ஆறு வருடங்களுக்கு முன் 17 வயதில் டென்னிஸ் விளையாட்டில் புயலென நுழைந்தவர் ஷரப்போவா, ஆனால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த slamமும் ஜெய்க்க வில்லை, இந்த முறையாவது ஜெயிப்பாரா?
இந்த வாரத் திரைப்படம்
கடந்த வார இறுதியில் என் மடிக்கணினியில் Salt படம் பார்த்தேன், வெளிவந்து 2 மாதம் ஆகிறது, இப்போதுதான் பார்த்தேன். படம் ம்ம்ம் Ok, ரொம்ப அருமையில்லை என்றாலும் பொழுதுபோக்கிற்கு நல்ல படம். மறுபடி ஒரு அதிரடி கதாப்பாத்திரம் ஏஞ்சலீனாவுக்கு, இந்த மாதிரி பாத்திரங்கள் (அழகு + அதிரடி) அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.
இந்த வாரம் சிதறிய முத்து:
மறுபடியும் கலைஞர். குஷ்பு தயாரிப்பில் சுந்தர் நடிக்கும் நகரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கலைஞர் பேசியதில் ஒரு பகுதி
"இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல – கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்."
இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
Tuesday, 7 September 2010
Subscribe to:
Post Comments (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)
No comments:
Post a Comment