விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை, அடுத்து மூன்று வரிக்குமேல் கதையை பற்றி ஒரு வார்த்தை இல்லை ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம்.
நகரத்தில் திடீரென்று ஒரு பெட்டியில் வெட்டப்பட்ட கைகள் மக்கள் அதிகம் இருக்கும் சில இடங்களில் வைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விசாரிக்கும் பொறுப்பு CB CID அதிகாரி சேரனிடம் கொடுக்கப்படுகிறது, அந்த விசாரணை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதே யுத்தம் செய்.

இப்படம் ஒரு அக்மார்க் த்ரில்லர், படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் நாம் கதையோடு ஒன்றி, சேரனின் குழுவில் நான்காவது ஆளாக இணைந்து கொள்கிறோம் (நான் கொண்டேன்). படத்திற்கு சிறப்பான பின்னனி இசை அமைத்து 'கே'வும், மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து சத்யனும் பலம் சேர்க்கின்றனர். நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பை கொடுத்திருகின்றனர்.
திரைப்படம் என்னும் ஊடகத்தை தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்திவருகிறார் மிஷ்கின். காட்சிகளுக்கு முக்கியத்துவம், அளவான வசனம், தேவையில்லாத காட்சிகள் தவிர்ப்பு என்று எடுத்துக்கொண்ட கதைக்கு மிஷ்கின் சீரான சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். உங்களின் அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன் மிஷ்கின்.
படத்தில் சில குறைகளும் உண்டு, மிஷ்கின் பாணி சண்டை காட்சி, மஞ்சள் சீலை பாடல், சில இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் கொஞ்சம் சினிமா தனமான கிளைமாக்ஸ் ஆகியவை. இதை தவிர்த்து பார்த்தால், யுத்தம் செய் இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திடாத த்ரில்லர், எந்தக் கதையையும், கதையை விவரிக்கும் விமர்சனத்தையும் படிக்காமல், படத்திற்கு செல்லுங்கள், you are in for some surprises.
குறிப்பு: இப்படத்திற்கு குழந்தைகளையோ சிறுவர்களையோ அழைத்து செல்லாதீர்கள்!.
குறிப்பு: இப்படத்திற்கு குழந்தைகளையோ சிறுவர்களையோ அழைத்து செல்லாதீர்கள்!.
No comments:
Post a Comment