அன்புத் தம்பீ!
கழகத்திற்காக உழைத்து உழைத்து எறும்பாக தேய்ந்த தேய்ந்து கொண்டிருக்கும் தேய போகும் என் உடன் பிறப்புகளே அவரின் வாரிசுகளே! உடன் பிறப்புகள் என்ற வார்த்தை எழுதும்போது கூட என் பேனா தளுதளுக்கிறது என் கண்கள் பனிக்கின்றன, அதை எல்லாம் துடைத்துக் கொண்டு என் ரத்தத்தால் (ரத்தத்தின் ரதம் அல்ல!) இந்த மடலை வரைகிறேன்.
ஒரு ரூபாய்க்கு மேல் விற்றால அரிசி வாங்கி சாப்பிட இயலாத, இலவச பொங்கல் பொருட்கள் கொடுக்காமல்விட்டால் பொங்கல் வைக்க வக்கில்லாத என் உடன் பிறப்புகளே! அரை நாள் உன்னாவிரதத்திலேயே ஒரு போரை நிறுத்தி தமிழர்களின் உயிர் மற்றும் மானம் காத்த உங்கள் முதல்வர் இல்லை இல்லை தலைவர் உங்களிடம் இந்த மடல் மூலம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் நம்மை நோக்கி வருகிறது, என் தம்பிகள் நீங்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை. நம்மை திட்டிய திட்டும் திட்டபோகும் அணைத்து கட்சிகளையும் இணைத்து பலமான ஒரு கூட்டணி அமைப்பேன் நீங்கள் உங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து உதய சூரியனை துளிர்க்க மன்னிக்கவும் உதிக்க செய்ய வேண்டும்.
திமுக கூட்டனியில் யார் யார் இருக்கிறார்கள் என்று குழப்பம் நில்வுவதாக உளவுத்துறை மூலம் செய்திகள் வந்தன, கவலைப்படாதீர்கள் அது எனக்கே குழப்பமகாத்தன் இருக்கிறது. என் வாரிசுகள் அனைவரின் கருத்துகளை கேட்ட போது அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர) கூட்டணி வாய்ப்பு இருப்பதாக கூறினார் (இன்னும் சில வாரிசுகள் பேச கட்சிகள் இல்லை) , இருந்தும் தமிழ் நாட்டிற்கு எது முக்கியம், என்ன செய்தால் இந்த நாடு செழிக்கும், என் வாழ் நாளிலே என்னை தவிர ஏழைகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க தேவையான் கூட்டணியை அமைப்போம் என்று மற்றும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
இப்போது நம் கூட்டணியில் திமுக இருக்கிறது காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று அந்த ராசாவுக்கு சாரி ராகுலுக்குத் தான் தெரியும், தவிர போக இடம் இல்லாத சில கட்சிகள் பொட்டிகள் ச்சே கொள்கைகள் அடிப்படையில் விரைவில் நம்மிடம் சேரும். ஆனால் நம் கூட்டணிக்கு வலு சேர்க்க நமை கரை சேர்க்க பாமாக சாரி பாமக நம் கூட்டணியில் இணைகிறது என்று வெக்கமோ அசிங்கமோ இன்றி மனதில் மட்டற்ற மகிழ்ச்சியில் தெரிவித்து கொள்கிறேன். பாமாக சாரி பாமக ஒரு நேர்மையான நம்பகமான கட்சி என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, அவர்கள் நமக்கு கொடுத்த பூஜ்ய மதிப்பெண்ணை நான் மறந்துவிட்டான், நீங்களும் மறந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். டாஸ்மாக்கின் வருமானம் தான் நமக்கு முதன்மையான வருமானம் என்றாலும் டாஸ்மாக்கின் நேரத்தை ஒரு சில மணித்துளிகள் குறைத்து கொள்வதின் மூலம் பாமகவின் கொள்கைக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டு சிறப்பான ஆட்சியை நம்மால் வழங்க முடியும். கழகத்திற்காக உழைத்து உழைத்து எறும்பாக தேய்ந்த தேய்ந்து கொண்டிருக்கும் தேய போகும் என் உடன் பிறப்புகளே அவரின் வாரிசுகளே! உடன் பிறப்புகள் என்ற வார்த்தை எழுதும்போது கூட என் பேனா தளுதளுக்கிறது என் கண்கள் பனிக்கின்றன, அதை எல்லாம் துடைத்துக் கொண்டு என் ரத்தத்தால் (ரத்தத்தின் ரதம் அல்ல!) இந்த மடலை வரைகிறேன்.
ஒரு ரூபாய்க்கு மேல் விற்றால அரிசி வாங்கி சாப்பிட இயலாத, இலவச பொங்கல் பொருட்கள் கொடுக்காமல்விட்டால் பொங்கல் வைக்க வக்கில்லாத என் உடன் பிறப்புகளே! அரை நாள் உன்னாவிரதத்திலேயே ஒரு போரை நிறுத்தி தமிழர்களின் உயிர் மற்றும் மானம் காத்த உங்கள் முதல்வர் இல்லை இல்லை தலைவர் உங்களிடம் இந்த மடல் மூலம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் நம்மை நோக்கி வருகிறது, என் தம்பிகள் நீங்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை. நம்மை திட்டிய திட்டும் திட்டபோகும் அணைத்து கட்சிகளையும் இணைத்து பலமான ஒரு கூட்டணி அமைப்பேன் நீங்கள் உங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து உதய சூரியனை துளிர்க்க மன்னிக்கவும் உதிக்க செய்ய வேண்டும்.
திமுக கூட்டனியில் யார் யார் இருக்கிறார்கள் என்று குழப்பம் நில்வுவதாக உளவுத்துறை மூலம் செய்திகள் வந்தன, கவலைப்படாதீர்கள் அது எனக்கே குழப்பமகாத்தன் இருக்கிறது. என் வாரிசுகள் அனைவரின் கருத்துகளை கேட்ட போது அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர) கூட்டணி வாய்ப்பு இருப்பதாக கூறினார் (இன்னும் சில வாரிசுகள் பேச கட்சிகள் இல்லை) , இருந்தும் தமிழ் நாட்டிற்கு எது முக்கியம், என்ன செய்தால் இந்த நாடு செழிக்கும், என் வாழ் நாளிலே என்னை தவிர ஏழைகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க தேவையான் கூட்டணியை அமைப்போம் என்று மற்றும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
பாமக நம் கூட்டனி சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பாமக தலைவரின் முகைத்தை பார்த்தாயா தம்பீ அதற்கு காரணம் நாம் கொடுத்த 31 சட்டமன்ற தொகுதியா இல்லை 1 ராஜ்ய சபா தொகுதியா இல்லை வேறேதும் காரணமா என்று லியோனி தலைமையிலே நாம் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம், அதில் காடுவெட்டி குரு என்னை புகழ்ந்தது பேசுவது கேட்கே என் மனம் துடிக்கிறது. பாமக எங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே வைத்திருகிறது எதை வேண்டுமானாலும் இலவசமாக கொடுங்கள் அனால் உப்பை மட்டும் கொடுக்காதீர்கள், அடுத்த முறை நாங்கள் எங்கும் ஜெய்க்க முடியாது என்றார், உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் கூறினேன் "உப்புக் கடலிலே சுடப்பட்டு மிதக்கும் உடல்களை பார்த்தே சொரணை வராத இவர்களை பார்த்து நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றேன்", என்ன கழக கண்மணிகளே உடன் பிறப்புகளே சரிதானே?
இப்படிக்கு
உங்கள் கீழ்படிந்துள்ள
ஏழை முதல்வரோ தலைவரோ
உங்கள் கீழ்படிந்துள்ள
ஏழை முதல்வரோ தலைவரோ