இந்த வருட புத்தகத் திருவிழாவில், திரு. மாதவராஜ் அவர்கள் முயற்சியில் பவா.செல்லதுரை அவர்களின் ஒத்துழைப்பில் வலைப்பூக்களில் இருந்து சில சிறந்த படைப்புகளை நான்கு புத்தகங்களாக தொகுத்து வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகங்கள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக்கவும். இதில் ஒரு புத்தகம், வலைப்பதிவர்களின் அனுபவங்களின் தொகுப்பான "பெருவெளிச் சலனங்கள்". இத்தொகுப்பில் அடியேனின் இந்தப்பதிவு தேர்வு செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. என் எழுத்தை தேர்வு செய்த மாதவராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் படைப்பை புத்தகத்தில் பார்ப்பதற்கு நான் இன்னும் சில வாரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, என் நண்பர்களை வாங்க சொல்லியிருக்கிறேன். சென்னை சென்றவுடன் பெருவெளிச் சலனங்களை படித்துவிட்டுத்தான் அடுத்தவேலை.
நான் இந்த வலைப்பூ முகவரியை பதித்து மூன்று வருடம் ஆனாலும், நான் எழுத ஆரம்பித்தது 2008 டிசம்பரில், இந்த டிசம்பருடன் ஒரு வருடம் ஆகிறது. முதல் மூன்று பதிவு எழுதியபின் பின்னூட்டம் ஏதும் இல்லாததால் யாரும் என் பதிவை படிப்பதில்லை என்று கருதி தொடர்ந்து எழுதவில்லை (இருந்தும் இவ்வளவு ஆசை இருந்திருக்ககூடாதுன்னு இப்ப புரியுது). பிறகொருநாள் எதச்சையாக என் வலைப்பூவை பார்த்த போது மகேஸ்வரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார் (மார்ச்சில் இட்டிருந்த பின்னூட்டத்தை ஜூனில் தான் பார்த்தேன்) , முகம் தெரியாத ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டது மகிழ்ச்சியை தந்தது, அது ஒரு வகையில் யாரோ நாம் எழுதியதைகூட படிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எழுதுவதில் ஆர்வத்தை அதிகப்படுத்தினேன், இனி தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன், என்னால் முடிந்தளவு அதை நிறைவு செய்தேன். நான் படித்த புத்தகம் பற்றி, பார்த்த திரைப்படம் பற்றி, பொது விசையங்கள், மனிதர்கள் என எல்லாம் எழுதினேன். கிளிஞ்சல்கள் என்ற தலைப்பில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி எழுதிக்கொண்டிருப்பது அதில் முக்கியமானது. பெருவெளிச் சலனங்கள் புத்தகத்தில் வந்திருப்பதும் கிளிஞ்சல்களில் எழுதிய மாரி என்கிற மொட்ட தாத்தா என்ற பதிவு தான். இப்போது என் வலைப்பூவில் 41 பதிவுகள் இருக்கிறன, எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், சில நேரங்களில் இவ்வளவு எப்படி எழுதினேன் என்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இதை ஒரு ஆரம்பமாகவே எண்ணுகிறேன். இந்த வருடம் என் வலையுலக வாழ்க்கையை பொறுத்தவரை சோம்பலாக ஆரம்பித்தாலும் மிக பிரகாசமாக முடிந்திருக்கிறது, இதை அடுத்த வருடத்திற்கு அச்சாரமாக வைத்துகொள்ளலாம் என்றே கருதுகிறேன்.
நான் எழுதுகிறேன் என்று சொன்னதும் என் அப்பா, அம்மா இருவரும் மகிழ்ந்து உற்சாகமூட்டினர். தன் அலுவலக நண்பர்களுக்கு என் வலைப்பூ முகவரியெல்லாம் கொடுத்து படிக்க சொன்ன என் அப்பா, எங்கள் ஊரில் இருந்த அந்தியூர் அண்ணனை பற்றி எழுதியதை படித்து கண் கலங்கியதாக கூறிய என் அம்மா, பின்னூட்டம் மூலம் தொடர்புகொண்டு பிறகு நேரில் சந்தித்து பேசி, நான் எழுதுவதை உற்சாகப்படுத்தி, அவருடைய வலையில் என் வலைப்பூவை பற்றியும் எழுதிய மகேஸ்வரன் (இவர் வலையில் என் வலைப்பூவை பற்றி குறிப்பிட்டிருந்த அடுத்தநாள் என் வலைப்பூவின் ஹிட் கவுன்ட் 300-400 என்று எகிறியது, தலை கால் புரியவில்லை அன்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் ஒற்றை படைக்கும் இரட்டை படைக்கும் நடுவில் திண்டாடிய போதுதான் சகஜமானேன்), நான் எழுதுவதையெல்லாம் படித்துவிட்டு "ரொம்ப நல்ல இருக்கு" என்று ஊக்கப்படுத்திய என் கல்லூரி, அலுவலக, வலைப்பூ மற்றும் என் அறை நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
புது வருடத்தில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Friday, 1 January 2010
Wednesday, 9 December 2009
Orkutஆல் ஒரு பயன்
சில நாட்களுக்கு முன்னாள், என் orkutல் நந்தா என்ற பெயரில் ஒரு Friend Request வந்திருந்தது, நல்ல வேலை பள்ளியின் பெயரை குறிப்பிட்டு இருந்ததால் சரியாய் கண்டுபிடித்து விட்டேன் (Profile புகைப்படமாக சூர்யா படத்தை வைத்திருந்தான்), கொஞ்சம் scrapபி கொண்டோம். அவன் கிறுக்கல் பக்கத்தை பார்த்த பொது இன்னொரு பள்ளி தோழனின் தொடர்பும் கிடைத்தது. இருவருக்கும் தொலைப்பேசினேன், மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்போது தான் அவர்களை தொடர்பு கொண்டேன், நான் யாரையும் orkutல் தேடவில்லை (அட நம்புங்கப்பா!!!). லெனின் என் குரலை கேட்டதும் கண்டு பிடித்துவிட்டான், பரவாயில்லை, இத்தனை வருடங்களில் என் குரல் மாறவேயில்லை என்றான், அவனை கொஞ்சம் கலாயக்கலாம் என்று இருந்தவனக்கு பல்பு. நந்தா என்னை கண்டுபிடிக்கவில்லை, கொஞ்சம் நேரம் பேசியபின் தான் கண்டுபிடித்தான். கடந்த 10 வருடங்களில் நடந்தவற்றில் முக்கியமானதை சில நிமிடங்களில் பகிர்ந்து கொண்டோம். 10 வருட இடைவெளி எங்கள் நடப்பை ஒன்று செய்யவில்லை என்பது ஆரோக்கியமான விசையம்.
Social networkingல் அவளவ்வு ஆரவம் இல்லாதவன் நான், orkut வந்த புதிதில் ஆர்வம் கொண்டு அதில் நானும் ஒரு உறுப்பினர் ஆனேன், அப்பொழுது orkutல் இல்லாதது ஒரு குற்றமாக கருதப்பட்டது , "என்னது நீ orkutல இல்லையா?" என்று வியந்தனர், இப்போது facebook. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்த நான், இப்போது அவளவ்வு இல்லை. Orkutஆல் எனக்கு நடந்த ஒரு நன்மை என் பள்ளி நண்பர்களின் நட்ப்பை பல வருடங்கள் கடந்து புதுபித்து கொண்டது, அதற்காக Orkutக்கு என் நன்றிகள்.
Social networkingல் அவளவ்வு ஆரவம் இல்லாதவன் நான், orkut வந்த புதிதில் ஆர்வம் கொண்டு அதில் நானும் ஒரு உறுப்பினர் ஆனேன், அப்பொழுது orkutல் இல்லாதது ஒரு குற்றமாக கருதப்பட்டது , "என்னது நீ orkutல இல்லையா?" என்று வியந்தனர், இப்போது facebook. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்த நான், இப்போது அவளவ்வு இல்லை. Orkutஆல் எனக்கு நடந்த ஒரு நன்மை என் பள்ளி நண்பர்களின் நட்ப்பை பல வருடங்கள் கடந்து புதுபித்து கொண்டது, அதற்காக Orkutக்கு என் நன்றிகள்.
Labels:
அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)