இந்தப்பதிவு போடும் இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு மின்னஞ்ல் அனுப்பியிருந்தார்கள், அதில் இம்மின்னஞ்ல் அனுப்பிய நபரின் நண்பர் ஒருவர் துபாய் வழியாக யு கே (UK) செல்லவிருந்திருக்கிறார், அவர் பெட்டியில் கொஞ்சம் கசகசாவும் (சமையலுக்காக என்று நினைக்கிறேன்) இருந்திருக்கிறது. சிறிதளவு சமையலுக்கு உபயோக்கப்படுத்தும் கசகசாவை வைத்துக்கொண்டு பாலைவனத்தில் கூட போதைப் பொருட்கள் விளைவிக்க முடியுமாம், அதனால் துபாய் காவல் துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க அவருடைய நண்பர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்காக வாதாடுவதற்கு வக்கீல்கள் ஏகப்பட்ட பணம் (AED 100,000) கேட்கிறார்களாம். தம்மாதூண்டு கசகசாவில் எவ்வளவு பெரிய பிரச்சனை, நினைக்கவே பயமாக இருக்கிறது. அவர் விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்று நம்புவோம், பிரார்த்திப்போம்.
![]() |
கசகசா(Poppy Seeds) |
நம்ம ஊரில் இந்த மாதிரி ஏதும் மாட்டினால் எப்படியாவது தப்பித்துவிடலாம், ஆனால் பெரும்பான்மையான மற்ற நாடுகளில் அதெல்லாம் ரொம்ப கஷ்டம், அதுவும் அரபு நாடுகளில் வாய்ப்பே இல்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் முன், எந்த நாட்டின் வழியாக செல்கிறோம் அங்கு என்ன என்ன எடுத்து செல்லலாம், செல்லக்கூடாது என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள், வெளிநாடு செல்லும் உங்கள் நண்பர்களிடமும் இதை தெரிவுயுங்கள். நாம் கவனிக்காத சின்ன விசையங்களெல்லாம் பெரிய பிரச்சனையை உருவாக்குகின்றன, எச்சரிக்கையாக இருப்போம்.