Monday 31 August 2009

திரைப்படங்களும் விமர்சனங்களும்

முன்பெல்லாம் நமக்கு ஒரு திரைப்படத்தின் விமர்சனம் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் கிடைக்கும். பின்னர் வலைத்தளங்களிலும் விமர்சனம் வர ஆரம்பித்தது. பின்னர் பல வலைப்பூவிலும் வந்தது, இப்போது கொஞ்ச காலமாக குறுஞ்செய்தியில் கூட வர ஆரம்பித்துவிட்டது. தொலைக்கட்சிகளில் வரும் விமர்சனம் அதில் நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம் போன்றவற்றை பொருத்து இருக்கும். பத்திரிகைகளில் வரும் விமர்சனம் ஓரளவுக்கு பரவாயில்லை, ஒரு சாராருக்கு சார்பில்லாமல் எழுத முயற்சிக்கிறார்கள் (சில பத்திரிகைகள்). இவர்களெல்லாம் அவர்களிடம் இருக்கும் சிறந்த சினிமா விமர்சகர்களை வைத்து விமர்சனங்களை எழுதுகிறார்கள் என்று நம்புவோம். இவர்கள் ஒரு மோசமான படத்தில் இருக்கும் நல்ல விஷயத்தை சொல்லிவிட்டு தான் படம் அவ்வளவ்வு சிறப்பில்லை என்ப்பார்கள். இவர்கள் பல காலமாக விமர்சனம் செய்து எழுதி வருகிறார்கள். இப்போது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல பலரும் வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் அந்த விமர்சனங்களைப் பற்றிய விமர்சனமே இந்தப் பதிவு.

ஒரு சினிமாவை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை, எந்த பொருள் அல்லது விஷயம் நாலு பேரின் பார்வைக்கு வருகிறதோ அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது, அரசியல் முதல் சினிமா வரை எல்லாம். ஒரு வீட்டின் சண்டையே தெருவுக்கு வந்தால் அது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அந்த வகையில் ஒரு திரைப்படமும் பலரின் பல்வேறான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நான் படித்த வரையில் ஒரு திரைப்படம் பல வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் போது கீழ்கொடுத்துள்ள அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறது.

1. எந்த மொழி படத்தில் இருந்து சுட்டதாக இருக்கும் என்ற தேடல்?
2. என்ன என்ன ஓட்டைகள் இருகின்றன?
3. படத்தில் காட்டப்பட்ட காட்சிகளில் விமர்சகருக்கு பிடிக்காத காட்சிகள்.
4. இதே போல் இதுக்கு முன் வந்த திரைப்படங்கள்?
5. இந்த படத்தை ஒத்திருக்கும் வேறு மொழி படங்கள் குறிப்பாக ஆங்கிலம், இரானியன், ஸ்பானிஷ் மற்றும் பல.
6. இயக்குனருக்கு அவர்கள் படத்தை எப்படி எடுத்திருக்கலாம் என்று தரும் அறிவுரைகள்.

ஒரு சிறந்த படத்தை விமர்சனம் செய்யும் போது விமர்சனத்தின் முடிவில் இந்த படத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று கூறி முடிக்கும் போது எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்த விமர்சகருக்கு பிடிக்காத ஒரு படத்தை விமர்சிக்கும் போது அந்த படத்தில் நடித்த நடிகர் முதல் இயக்குனர் வரை கேலிக்கு உள்ளக்கட்படுகின்றனர், விமர்சனம் என்கிற பெயரில் அந்த படத்தை கொத்தி குதறி போட்டுவிட்டு போய்விடுகின்றனர். இந்த விமர்சனம் இவருடன் நிற்பதில்லை இதை படிப்பவர்கள் பலரும் அவர்கள் அந்த படம் பார்த்தார்களோ இல்லையோ அதே போல் நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர் அது பலருக்கும் பரவி விடுகிறது. இது யாரவது ஒருவருடைய அலைப்பேசிக்கு ஏற, பிறகு புற்றீசல் போல் அந்த விமர்சனம் பரவி அந்த படத்தையே மரணப்படுக்கையில் போட்டு விடுகின்றது. வலைத்தளங்களில் விமர்சனம் எழுதுபவர்களாவது பரவாயில்லை படத்தை பார்த்து விட்டு தான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் இந்த அலைப்பேசியில் வரும் ஒரு குறுஞ்செய்தி சில நிமிடங்களில் பல ஆயிரம் அலைப்பேசிகளில் வசிக்க ஆரம்பித்துவிடுகிறது, இந்த வகையில் அனுப்புபவர்கள் பெரும்பாலும் அத்திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டார்கள், வரும் செய்தியை forward செய்வதோடு அவர்கள் வேலை முடிந்துவிடுகிறது, அந்த ஒரு செய்தி சாக வரம் பெற்று அலைந்து கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது அந்தப்படமும் தயாரிப்பாளரும்.

நாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதை மொக்கை, மோசமான படம் என்று கூற சில நிமிடங்கள் தான் ஆகும், ஆனால் அந்தப்படத்தை எடுத்து வெளியிட அந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு படம் என்பது ஒரு படைப்பு, இயக்குனர் படைப்பாளி. ஒரு படம் எவ்வளவ்வு மோசமானதாக இருந்தாலும் அதை படைத்தவனை பொறுத்தவரை அது அவனுடைய படைப்பு, ஆகவே அது மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகும்போது படிப்பாளியையும் பாதிக்கிறது. திரைப்பட படப்பிடிப்பை பார்த்திருக்கிறீர்களா? பார்த்தவர்களுக்குத் தெரியும் ஒரு காட்சி எடுப்பதற்கு எவ்வளவ்வு நேரம், மக்கள் சக்தி, உழைப்பு, பணம், பொறுமை, இயற்கையின் ஒத்துழைப்பு தேவையென்று. என்னுடைய சிறு வயதில் சினிமா படப்பிடிப்பை பார்க்க ரொம்ப ஆசைப்பட்டேன், ஒன்றிரண்டு படப்பிடிப்பை பார்த்தபின் அந்த ஆசை போய்விட்டது. ஒரு கதாப்பாத்திரம் நடந்து வரும் காட்சியையே சில சமயங்களில் ஒரு நாள் எடுப்பார்கள். ஒரு நாடகம் நடித்த அனுபவமோ அல்ல இயக்கிய அனுபவமோ இருந்தால் இது எளிதாக புரியும். கிட்டத்தட்ட Friends படத்தில் வரும் வடிவேலு போலதான் இருக்கும் (ஆணியப் ...). ஒரு காட்சி எடுப்பதற்கே இவ்வளவ்வு சிரமம் என்றால் ஒரு படம் எடுப்பதற்கு? ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அந்த படம் எடுத்து முடியும் வரை முதன்மையான நடிகர் நடிகையர், இயக்குனர் தவிர குறைந்தபட்சம் ஒரு 500 பேருக்காவது வேலை கிடைக்கும், அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இவ்வளவ்வு அடங்கியிருகின்றன. ஆயினும் பல தடைகள், இன்னல்கள் தாண்டி வரும் ஒரு படத்தை சீ தூ என்று இடதுகையால் ஒதுக்க நமக்கு தேவைப்படுவது சில நிமிடங்களே.

ஒரு திரைப்படத்தை விமர்சிக்கவே கூடாது என்பதல்ல என் வாதம். எந்த கலையும் விமர்சிக்கப்படாவிட்டால் அது அடுத்த கட்டத்திற்கு முன்னேறாது, ஒரு கலையின் முன்னேற்றத்திற்கு விமர்சனம் தேவை. அதற்க்காக உங்களுக்கு பிடிக்காத படத்தை இது அந்த படத்தில் இருந்து காப்பியடித்து, இந்த காட்சி வேற படத்தில் இருந்து சுட்டது, இந்த படத்தில் கதையே இல்லை என்று கண்ணா பின்னவென்று விமர்சித்துவிட்டு அதை மற்றவர்களுக்கும் படிக்க கொடுத்துவிடுவதுதான் பிரச்சனை. ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்க்காக மற்றவர்களுக்கும் பிடிக்காது என்றில்லை.எந்த ஒரு படமும் யாரவது ஒருத்தருக்கு பிடிக்கும் வாய்ப்புள்ளது, நமுக்கு பிடிக்காதது மற்றவர்க்கு பிடிக்காது என்று நினைக்க தேவையில்லை. ஒரு படத்தை பார்த்து விட்டு நல்லா இல்லை என்று சொன்னால் பரவாயில்லை, இந்த விமர்சனங்களை படித்துவிட்டே சிலர் இந்தப்படம் மோசமாமே என்று கூற ஆரம்பித்துவிடுகின்றனர், படம் பார்க்காமளையே விமர்சிப்பவர்கள் மீதுதான் அதிக கோபம்.

ஒரு படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாம் மற்றவர்களுக்கும் சொல்ல தேவையில்லை, அப்படத்தின் மேல் ஈடுபாடு உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இதனால் எந்த மோசமான படமும் 100 நாள் ஓடிவிடாது. ஒரு படம் நன்றாக ஓடினால் அதிலிருக்கும் எதாவது ஒரு விசையம் பலரை கவர்ந்திருக்கும், அதில் நல்ல கதையிருக்கலாம், நல்ல நடிப்பிருக்கலாம், அல்லது அதில் நடித்த நடிகையின் இடுப்பு பிடித்திருக்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கோ (அவர்களுடைய ரசனை தெரியுமென்றால்) அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கோ உங்கள் விமர்சனத்தை சொல்வதில் தவறில்லை, ஆனால் அனைவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஒரு படத்தை விமர்சிக்கவே கூடாது என்றில்லை, எந்த திரைப்படம் தவறான கருத்துகளையும் செய்திகளையும் சமுதாயத்துக்கு தருகிறதோ அந்த திரைப்படங்களை கண்டிப்பாக எங்கும் விமர்சிக்கலாம் அதில் ஒரு பயன் இருக்கிறது, மற்ற படங்களை விட்டுவிடலாம். ஆனால் விமர்சனம் செய்யும் முன் நீங்கள் விமர்சிப்பது பல வருடங்களாக சினிமாவை தவிர்த்து வாழத்தெரியாத கூட்டம் ஒன்றிற்க்காக எடுக்கப்பட்ட படம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அத்திரைப்படத்தை நீங்கள் பார்த்து சிலாகித்த ஸ்பானிஷ், பிரெஞ்சு, இரானியன், ஆங்கிலம் போன்ற மற்ற மொழிப்படங்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர்கள் வேறு நாம் வேறு, நாங்கள் திரைப்படம் சாரதா ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கவே இன்னும் பல தேர்தல்கள் தேவைப்படும், திரைப்படங்களை பொறுத்தவரை இன்னும் பலர் தவழ்ந்து கொண்டிருக்கிறோம், சிலர் தான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள், நாங்கள் ஓடுவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.

இந்தப்பதிவு எழுதக்காரணம் சமீபத்தில் சில படங்களை பற்றி படம் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் கண்டபடி விமர்சித்து வந்த மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் மற்றும் எனக்கு திரைப்படங்களின் மேலிருக்கும் ஆர்வமும் காதலும். என் வலைப்பூவில் எனக்கு பிடித்த படங்களை பற்றிமட்டுமே எழுதுவதாக இருகிறேன், முடிந்தால் நீங்களும்.

குறிப்பு: சிறந்த படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் விமர்சனம் எழுதுவதை நிறுத்திவிட்டு, பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞானி அவர்கள் கோலம் - வீடு தேடி வரும் சினிமா இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், அதில் நீங்களும் இணைந்து கொண்டு நல்ல திரைப்படங்கள் உருவாக உங்கள் பங்களிப்பை அளியுங்கள். மேலும் விபரங்களுக்கு http://gnani.net/.

Monday 24 August 2009

கிளிஞ்சல் 3 - அந்தியூர்

அந்தியூர் என்ற ஊரை கேள்விப்படிருப்பீர்கள், ஆனால் நான் சொல்லப்போவது அந்தியூர் என்ற ஊரை பற்றியில்லை அந்தியூர் என்ற நபரை பற்றி. எனக்கு அந்தியூர் என்ற ஊர் அறிமுகம் ஆகும் முன் அந்தியூர் என்ற நபர் தான் அறிமுகமானார். அந்தியூருடைய பெயர் தங்கராசு. அவர் பெயர் தங்கராசு என்பது பல பேருக்கு தெரியாது, ஏன் எனக்கே இப்பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் அவர் பெயரை யோசிக்கும் பொது நினைவு வரவில்லை, பின் என் அம்மாவை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரின் சொந்த ஊர் அந்தியூர் பக்கத்திலிருக்கும் அம்மனாம்பாளையம், அந்த ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு அவரின் அப்பா குடும்பத்துடன் வந்து தங்கினார். அந்தியூர் பக்கத்திலிருந்து வந்ததால் சிறு வயதிலேயே தங்கராசு என்று அழைக்கப்படாமல் அந்தியூர்காரன் , அந்தியூர்காரன் என்றழைக்கப்பட்டார், பின்னர் அதுவே அந்தியூர் ஆனது. பின்னர் பெரும்பாலும் அவர் அந்தியூர் என்ற பெயரை தவிர வேறு பெயரில் அழைக்கப்படவில்லை.

அந்தியூரை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உழைப்பாளி.
"வயலுக்கு தண்ணி கட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"பாத்தி பிடிக்கனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"மஞ்சள் வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"கரும்பு வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"ஐயோ் பாம்பு..." - "அந்தியூரை கூப்பிடுங்க"

எத்தனையோ நாள் இரவு எங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியிருகிறார், வெட்டி வைத்த மஞ்சளுக்கு காவல் இருந்திருக்கிறார், இரவெல்லாம் நெல்லடித்திருகிறார். எங்கள் ஊரில் எதாவது பனை அல்லது தென்னை மரம் வெட்டப்பட்டால் அதிலிரிந்து குருத்து வெட்டி தந்திருக்கிறார், பனங்காய் வெட்டி தந்திருக்கிறார், எங்கள் வீட்டில் கோழி குழம்பு என்றால் கோழி பொசுக்குவது அவராகத்தான் இருக்கும்.அவர் செய்யாத தோட்ட வேலை எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடி பெருக்கின் போது ஊஞ்சல் கட்டுவதாகட்டும், எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் விசேசத்தின் போது உதவி செய்வதாகட்டும் அவருக்கு நிகர் அவர் தான்.என்ன வேலை எத்தனை மணிக்கு சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி செய்வார். என் அக்காவின் திருமணம் வேறு ஊரில் நடந்த போது, கல்யாண வீடு என்று தெரிவதற்க்காக அவருடைய டேப் ரெகார்டரை எங்கள் வீடு திண்ணையில் வைத்து பாட்டு ஒலிபரப்பியிருக்கிறார்.

பார்ப்பதற்கு ஆரம்பகால விஜயகாந்த் போல இருப்பார்.கடின உழைபினாலேயே அவர் உடல் மிக வலுவாக இருக்கும், என் சிறுவயதில் அவர் புஜ பலத்தை காட்ட சொல்லி அதில் தொங்கியிருக்கிறேன், எங்கள் ஊர் அர்னால்ட் அவர் தான். அவர் முகத்தில் எப்போதும் சிறு முரட்டுத்தனம் குடியிருக்கும். எப்பவாவது சிரிப்பார். காட்டில் வேலை செய்யும் போது நேரம் வீணடிக்காமல் ஏதோ தன் சொந்த தோட்டத்தில் வேலை செய்வது போல அக்கறையாக வேலை செய்வார். எங்கள் தோட்டத்தில் அவர் செய்யாத வேலை இல்லை, எங்கள் தோட்டத்தில் விளைந்த பல வெள்ளாமைகளில் அவருடைய உழைப்பு கணிசமாக உண்டு.

நான் எப்போதும் அவரை அந்தியூர் அண்ணா என்று தான் அழைப்பேன். என்னை பெரும்பாலும் மலை என்று அழைப்பார். காலையும் மாலையும் தேநீர் குடிப்பதற்கு தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எங்கள் வீட்டிற்கு வராத நாட்கள் மிகக் குறைவு. என்னை பல முறை பள்ளியில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். என் பாட்டி கவலைக்கிடமாக இருந்த போது கூட அவர்தான் என்னை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். இப்படி பல வேலைகளில் பல உதவிகள். என் சிறு வயது முதல் கல்லூரி காலம் முடியும் வரை என் வாழ்வில் பல இடங்களில் பரவிகிடக்கிறார் அந்தியூர் அண்ணன். அவருடைய மனைவி பெயர் தங்கம்மாள், அவரும் எங்கள் தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார், இன்னமும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் செல்வம், முத்து. இவர்கள் பெரிதாக படிக்கவில்லை. இருவரும் பனியன் கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

சில பொருட்கள், சம்பவங்கள் சிலரை ஞாபகப்படுத்தும், அந்த வகையில் இரண்டு விசையங்கள் அவரை ஞாபகப்படுத்தும் ஒன்று பலாப்பழம் மற்றொன்று ஆடி மாதம் கட்டும் தூரி (அதாவது ஊஞ்சல்). ஒவ்வொரு வருடமும் பலாப்பழ சீசனின் போது என் அப்பா வாங்கி வரும் பலாப்பழத்தை வெட்டி சுளைகளை எடுத்து தருவது அந்தியூர் அண்ணன் தான். பலாப்பழத்தை மற்ற பழங்களை போல அப்படியே வெட்டி சாப்பிட முடியாது, பலாப்பழத்தை வெட்டும் போது அதனுள் இருக்கும் நார்கள் அதிலுள்ள பசையால் கத்தியிலும், கையிலும் ஒட்டிக்கொள்ளும் பிறகு அதை சுத்தம் செய்ய கடினமாக இருக்கும், அதற்காகவே பலாப்பழத்தை வெட்டும்முன் கத்தி மற்றும் கைகளில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு வெட்டுவதுண்டு, அப்படி மிக அழகாக சுத்தமாக வெட்டித் தருவார் அவர். அதே போல தூரி, ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் தூரி கட்டி ஆடுவது பல இடங்களில் உள்ள பழக்கம், அப்படி நாங்கள் எங்கள் புளிய மரத்தில் தூரி கட்டி ஆடுவோம், அந்த தூரியை கட்டி தருவது அவர் தான். பல நேரங்களில் தூரி கட்டிவிட்டு வேகமாக ஆட்டிவிடுவார் கல்லூரி சென்ற காலங்களில் கூட தூரி ஆடியது உண்டு,. அவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு பனை மரங்களுக்கு இடையில் பெரிய தூரியெல்லாம் கட்டித் தருவார், அதில் ஆடுவதே பயமாக இருக்கும்.

அவருடைய கேட்கும் திறன் சில வருடங்களுக்கு முன் கொஞ்சம் குறைந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் அவர் எங்கள் ஊர்லிருந்து கவுந்தப்பாடிக்கு மிதிவண்டியில் செல்லும் போது பின்னாடி வந்த லாரி மோதியது, பலமான அடி, உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் அவர்கள் போலீஸ் கேஸ் அது இது என்று ஏற்ப்படுத்திய தாமதத்தில் அங்கேயே தன்னுடைய கடைசி மூச்சை சுவாசித்தார். இந்த விபத்து பற்றிய தகவல் எங்கள் வீடிற்கு தான் முதலில் தொலைப்பேசியில் தெரிவிக்கப்பட்டது, அவரின் உறவினர்கள் செல்லும் போது அவர் இறந்திருந்தார். இந்த சம்பவம் நடந்தன்று நான் உடல் நிலை சரியில்லாததால் விடுப்பில் வீட்டில் தான் இருந்தேன், அந்த செய்தி கேட்டு என்னால் நம்ப முடியவில்லை, அழ ஆரம்பித்துவிட்டேன், வேறென்ன செய்ய முடியும். காவல் துறை விசாரணைக்கு பிறகு அவருடைய உடல் எடுத்து வரப்பட்டது, உடல் நிலை சரி இல்லாததால் நான் சென்று பார்க்கவில்லை, அதுவும் நல்லதுதான் என்று தோன்றுகிறது பிறகெப்போது அவர் நினைவு வரும்போதெல்லாம் அவருடைய கம்பீரமான முகமே ஞாபகம் வருகிறது.

கடந்த முறை ஊருக்கு சென்ற போது என் அக்கா மகள் தூரி கட்டி தர சொல்லி அடம் பண்ணி கொண்டிருத்தால், ஆடி 18 அன்று வரை தூரி கட்டப்படாமலையே இருந்தது பிறகு அன்று மதியம் போலத் தான் தூரி கட்டப்பட்டது. அவள் அன்று மாலை வரை மட்டும் ஆடிவிட்டு பிறகு ஜெடெக்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அந்தியூர் அண்ணன் போன்றவர்களை இவள் வாழ்க்கையில் சந்திப்பாளா என்பது சந்தேகமே. அந்தியூர் அண்ணன் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் மனதிலும், அவருக்கான இந்த அஞ்சலி பதிவிலும். உங்கள் ஊரிலும் இதுபோல் போல் ஒருவர் கண்டிப்பாக இருப்பார், தேடிப்பாருங்கள்.

Sunday 23 August 2009

அவசர ஊர்தி - ஒரு வேண்டுகோள்

அவசரம், கண்டிப்பாக நம்மில் பெரும்பாலனோர் ஒரு அவசர வாழ்க்கையில் தான் இருக்கிறோம், அந்த அவசரம் நாமாக ஏற்படுத்திக்கொண்டதுதான் என்றாலும் அதை விட்டு நம்மில் பலரால் வெளியே வர முடியவில்லை. ஒரு நிமிடம் சாலையோரமாக நின்று பார்த்தால் எத்தனை பேர் ஒடிகொண்டிருக்கிறார்கள் என்று தெரியும், அனால் அதை பார்ப்பதற்கும் நமக்கு நேரமில்லை. இதைப்பற்றி வேறு சமயத்தில் யோசிப்போம் இப்போது நான் சொல்ல வந்ததை அவசரமாக சொல்லிவிடுகிறேன்.

நேற்று காலை அலுவலகம் செல்லும் பொது அண்ணா சாலையில் ஒரு அவசர ஊர்தி அவகாசமின்றி கத்திக்கொண்டிருந்தது. அதை யாரும் சட்டை செய்ததாக தெரியவில்லை, அனைவரும் அதை மற்றொரு ஊர்தியாகவே பார்த்தனர். அதில் ஒரு உயிர் போராடிக்கொண்டிருப்பதாகவோ அல்லது ஒரு உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருப்பதாகவோ யாரும் நினைக்கவில்லை. யாரும் அந்த வண்டிக்கு வழிவிடவில்லை, ஒருவேளை இடம்மிருந்திருந்தால் விட்டிருப்பார்களோ என்னவோ , ஆனால் அந்த அவசர ஊர்திக்கு இடது, வலது புறமாக இருந்தவர்களும் சரி முன், பின் இருந்தவர்களும் சரி கொஞ்சம் பொறுத்து அந்த வண்டி சென்ற பின் செல்லலாம் என்று இல்லை அனைவரும் அதை பின் தள்ளிவிட்டு முன் செல்வதிலேயே குறியாயிருந்தனர்,
ஒரு அவசர ஊர்தியின் அவசியம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதற்கான மரியாதை சாலைகளில் வழங்கப்படுவதில்லை.இதில் முழுத்தவறும் நம்மேல் இல்லை, பல சாலைகளில் நாம் வழிவிட நினைத்தாலும் வழிவிட வழியில்லை, சில இடங்களில் வழியிருந்தும் நாம் விடுவதில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சாலைகளில் இந்த விதிகள் சிறப்பாக பின்பற்றபடுகிறது ஒரு வேலை அங்கு சாலைகள் சிறப்பாக அமைக்கப்பெற்றது காரணமாக இருக்கலாம். அங்கு அவசர ஊர்தி வரும் சைரென் கேட்டவுடன் சாலைகளில் செல்பவர்கள் தங்கள் வேகத்தை குறைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி அந்த வண்டிக்கு வழி விடுகிறார்கள். அப்படி வழிவிடவில்லை என்றல் அது அங்கு ஒரு குற்றமாக பதிவு செய்யப்படுகிறது (இது சம்பந்தமான ஒரு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது). நான் இதை சொல்வதால் நான் அவர்களை உயர்த்தியும் நம்மை தாழ்த்தியும் சொல்லவில்லை சில விசயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் ஊரில் இந்த அளவுக்கு பின்பற்றுவது எல்லாம் முடியாது ஆனால் நாம் மனம் வைத்தால் ஓரளவுக்கு உதவலாம், நாம் எதாவது ஒரு அவசர ஊர்திக்கு வழிவிட்டால் சாலையில் இருக்கும் மற்றவர்களும் நம்மை பார்த்து வழிவிடுவார்கள் (என்று நம்புவோம்), ஒவ்வொரு அவசர வண்டியில் இருப்பவர்களையும் நமக்கு தெரிந்தவர்களாக நினைத்தால் கண்டிப்பாக நாம்மால் அந்த வண்டிகளுக்கு வழி விட முடியும். முயற்சி செய்து பார்ப்போம்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட சாலையிலிருந்து சைரென் ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பதிவினால் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்றாலும் இதனால் யாரவது ஒருத்தர் இதைப்பின்பற்ற தொடங்கினால் மகிழ்ச்சியே.

Saturday 22 August 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்னை


வணக்கம் சென்னை. இன்று 370வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.

1639ஆம் ஆண்டு சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் Francis Day மற்றும் Andrew Cogan வணிகம் செய்வதற்காக வாங்கினர். அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்பு ஒரு வருடம் கழித்து இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வணிகம் செய்து வந்தனர். கொஞ்சகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும் மெட்ராஸ் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கினர். தற்போதைய தமிழ்நாட்டுடன் ஆந்த்ரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவில் இருந்து கொஞ்சம் பிச்சு பிச்சு சேர்த்தால் பழைய சென்னை மாகாணம் கிடைக்கும்.சுதந்திரம் அடைந்த பிறகு, மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது தற்போதைய தமிழ்நாடு. 1968இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996இல் மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.

சென்னை தற்போது என் போன்ற பலரின் வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது, எனக்கு உலகின் நுழைவாயில் போன்றது சென்னை, சென்னை பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறது, இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும். சென்னையும் நமக்கு ஒரு ஆசனாகிவிட்டது. இன்னும் பலருக்கு வாழ்க்கை தரப்போகும் சென்னை மாநகருக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Monday 17 August 2009

SRK - Please come down to earth.

Lot of people in India mostly North India couldn't sleep last weekend, Prime Media's like IBNLIVE, NDTV couldn't believe, they are screaming like some biggest insult happen to our nation during 62nd Independence day celebration, wait... what happened?Believe it or not, SHAHRUKH KHAN the BADSHAH of bollywood was detained by US security personal's for two hours. Shahrukh couldn't accept this, so is the media. He said he was checked because his name end's with Khan. Our media came to streets in support of Khan and started asking opinion about this incident and said whole bollywood is not happy about this (Except few who didn't buy this thought).
Some citizens of India couldn't tolerate this as they feel this as their own insult. They came down to street, started shouting against US and went on to torch the US flag.

What happened in Newark airport on AUG 15? Shahrukh reached US and was waiting for his luggage, most of this co-passengers left the airport as they got the baggage but Shahrukh was waiting, some US officials wanted to check and they started inquiring him, the inquiry has gone for more than 1 hour and after that he was left free. This inquiry was insulting to Shahrukh and to our media. Shahrukh said that he is not happy with this incident and said "angry and humiliated". He said his name came in the alert list (How did he see that?), so he is detained by US officials for inquiry, but US officials clarified that "He is not detained but only was questioned as part of a routine process that took 66 minutes, but it took a little longer because his bag was lost by the airline".He also said that he was questioned because he is a Muslim. They wanted to check you and your identity, they checked that's it, why you are making this as so sensational, SRK please come down to earth.99% of them whoever traveled (Whatever the religion may be) to different countries might experienced this kind of check ups, this is not to insult or humiliate the traveler but to safeguard their country and people.

Reactions:
Harbhajan Singh and Salman khan has said this is a routine affair nothing to worry about. - Rightly said.

Priyanka said "Shocking, disturbing and downright disgraceful. It’s such behavior that fuels hatred and racism. Shah Rukh Khan is a world figure for god’s sake. Get real!" - We understand madam you need to act more movies with him.

Karan Johar said "I am shocked and upset…feeling terrible for ShahRukh" - Yeah you are his best friend of SRK and the DIRECTOR of My Name is Khan so you have to feel bad.

We understand why most of the Movie Celebrities supports Shahrukh's claim.

But one comment which made me worry a lot is made by our Information and Broadcasting Minister Ambika Soni. She has said sorry, suggested that India should do a "TIT-FOR-TAT" to Americans who visits India. What a worst and uncultured comment? If an ordinary people didn't understand this issue that it is understood most of us spend majority of our time with movies and stars, to them he may be a larger than life HERO. But a minister should think before commenting like this. Why don't these people didn't understand the reason why US has such strict security check. Because for them one 9/11 is enough. They want to protect their people and nation so they have such tight security measures. Not like us to watch at least 5-10 terrorist attacks every year in India and we know about the measures taken by our nation to stop these attacks and about our politicians. US has taken all kinds of measures to safeguard their nation, so if we are going to their nation and if they want to Strip check us before we enter their nation then we have to strip, if you don't like these then don't go to these countries, don't buy any properties there just stay here.

Main reason for all these outrage by Media and people and even for this article is non other than SRK. If he had said this is an normal check and if he had said he respect them and their rules then it would have been very nice of him. But he blow this issues out of proposition by saying that he was insulted and humiliated, he left there and our media started from where he left, they got something to chew for next few days, they made news about this by all means, now they will be waiting for next. Later Shahrukh said that he won’t go to US with his family in future. Now he is saying that "Let’s put this behind us, think positively and move ahead". He put this front of everyone made all kinds of non sense now we want us to put these things behind and do our work, Please do not make business out of nothing.

Incidentally on the same day Bob Dylan a famous US Singer-Songwriter was questioned in a Airport asking about his Identity, no one complained about this.I see this as a publicity stint not for SRK, but for his next movie My Name Is Khan, because the movie also deals with similar issue. He may deny that or it may not be true but I see that way, because if he was responsible citizen and actor, he shouldn't have made news out of this and should have respected other countries rules and should set an example. If this happens again in future for God's sake don't make news out of it. I wish these kind of incidents shall not happen to SRK in future and hope he shall take his family to US in future.

He said that US should not live a isolated bubble because this world is made of 195 countries not only US, you are absolutely correct SRK and same applies to you also "You may be the King of bollywood but when you come out of it keep in mind that your are just another person in this world for whom all the rules applies."

Saturday 15 August 2009

12 Angry Men (1957)


சமீபத்தில் நான் பார்த்த ஆங்கிலப்படம் 12 Angry Men. 1957லில் வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம். இத்திரைப்படத்தை பற்றி கொஞ்ச நாள் முன் என் நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டிருந்தேன், நல்ல திரைப்படம் என்று கூறியிருந்தனர். சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிறிது வெளிச்சம் என்னும் தொடரில் இத்திரைப்படத்தை பற்றி குறிப்பிடிருந்தது் இத்திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. இனி திரைப்படத்தை பற்றி.

ஒரு இளைஞன் அவன் தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறான், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது, வழக்கு விசாரணையின் கடைசி நாளன்று படம் தொடங்குகிறது. கொலை வழக்கு விசாரணை இத்துடன் முடிவடைகிறது என்றும் நீங்கள் சேகரித்த தவல்களை வைத்து குற்றம் சாட்டப்படிருப்பவன் குற்றவாளியா இல்லையா என்று கூறுமாறு அங்கிருக்கும் ஜுரிக்கு ( A jury is a group of law-abiding members of a community brought together to give an impartial judgment) கூறுகிறார் நீதிபதி (ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை ஜூரிக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது அமெரிக்க நாட்டில் உள்ள நடைமுறை, இந்த பழக்கம் இன்னும் சில மாகாணங்களில் இருக்கும் போல.). அந்த ஜூரியில் மொத்தம் 12 பேர். யாருக்காவது அவன் குற்றவாளி என்பதில் குறைந்தபட்ச சந்தேகம் (Reasonable Doubts) இருந்தால் கூட அவனை குற்றவாளி இல்லை என்று அவர் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் நீதிபதி.பின்னர் அந்த ஜுரி அவன் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு அறையில் குழுமுகின்றது .

நடந்த விசாரணையிலும், கிடைத்த ஆதாரத்திலும் அந்த இளைஞன் கொலை செய்திருப்பது தெளிவாக தெரிவதாகவும் அதனால் விரைவில் அவனை குற்றவாளி என்று முடிவு செய்துவிட்டு நாம் கிளம்பி விடலாம் என்றே பலரும் பேசிக்கொள்கின்றனர். முதலில் அவன் குற்றவாளியா இல்லையா என்று ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாம் என்றும் யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் விவாதிக்கலாம் என்றும் முடிவு செய்கின்றனர். ஓட்டெடுபில் அவன் குற்றாவாளி என்று 11 பேரும், குற்றாவாளி இல்லை என்று ஒருவரும் ஓட்டளிக்கின்றனர். இதனால் எரிச்சல் அடையும் சிலர் அவன் குற்றவாளி என்று பல வகையில் நீதிமன்றத்தில் நிரூபிக்க பட்டதென்றும் இதில் எந்த சந்தேகமும் இல்லையென்றும் கூறுகின்றனர். அதற்க்கு அந்த ஒருவர், எந்த விவாதமும் செய்யாமல் சில நிமிடங்களில் ஒருவனை குற்றவாளி என்று சொல்லி அவனுக்கு மரண தண்டனை பெற்று தர தனக்கு மனமில்லை என்றும் இது ஒருவனின் வாழ்க்கை பிரச்சனை என்றும் ஆகவே நாம் அனைவரும் இந்த வழக்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

குற்றவாளி என்று ஓட்டளித்த 11 பேரும் மறுத்த ஓட்டளித்த அந்த ஒருவரை சமாதானப்படுத்தலாம் என்று முடிவு செய்து அவரவர் கருத்தை கூறுகின்றனர். இந்த விவாதம் எவ்வாறு முடிகிறது என்பது மீதிப்படம். ஒவ்வொருவரும் அவன் ஏன் குற்றவாளி என்று விளக்குகிறார்கள், அந்த ஒருவர் மட்டும் அவன் ஏன் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். ஒரு சுற்று பேசியவுடன் ஒரு ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த மாதிரி பல சுற்றுகள் விவாதிக்கிறார்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓட்டெடுப்பு நடக்கிறது. அவர்கள் குறித்த நேரத்திற்குள் கடைசியாக என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது படத்தின் முடிவு.

அந்த ஜூரியில் இருக்கும் 12 பெரும் ஒவ்வொரு மனோநிலையில் இருக்கிறார்கள். ஒருவர் அன்று நடக்கும் ஒரு விளையாட்டுக்கு டிக்கெட் வாங்கியிருப்பதால் சீக்கிரம் விவாதத்தை முடித்துவிட்டு கிளம்பவேண்டும் என்று துடிக்கிறார், மற்றொருவர் தன் தொழிலை பற்றியே பேசுகிறார், இன்னொருவர் அந்த கைதி குற்றாவாளி தான் என்றும் இதை யாரும் மற்ற முடியாது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொருவரின் மனோநிலையும் அதற்கேற்ற வசனங்களும் சிறப்பாக அமைக்கப்பெற்றுகிறது, குறிப்பாக வசனங்கள் மிக சிறப்பாக உள்ளன. படத்தின் ஒளிப்பதிவும் அருமை, 50 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியவில்லை (படம் கருப்பு வெள்ளை). படம் முழுவதும் ஒரு அறையிலேயே நடக்கிறது, ஒரு அறை, 12 பேர் இதுதான் கதை நடக்கும் இடம், மிக சிறப்பான திரைக்கதையும் (Reginald Rose) இயக்கமும் (Sidney Lumet) நம்மை இடத்தை விட்டு நகராமல் கட்டிபோடுகின்றன. படத்தின் மற்றொரு சிறப்பு எந்த கதாப்பாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை, படம் முடியும் முன் அந்த ஜூரியில் இருந்த இரண்டு பேர் மட்டும் தங்கள் பெயர்களை கேட்டுகொள்கிறார்கள்.

எங்கள் அலுவலகத்தில் நடக்கும் Business Communication skills பயிற்சியின் போது இத்திரைப்படம் ஒளிபரப்புகிறார்கள். இந்தப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி விருது பெற்றிருக்கிறது. எந்த படைப்பு அதன் காலத்தையும் விஞ்சி நிற்கிறதோ அது அமர காவியம் (Classic) ஆகும், இந்தப்படமும் அப்படியே. வாய்ப்பு கிடைக்கும் போது இத்திரைப்படத்தை பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

Thursday 13 August 2009

சுதந்திர தினம்


அதற்குள் வந்துவிட்டது அடுத்த சுதந்திரம் தினம். சுதந்திர தினம் ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான உணர்வை ஏற்படுத்தும். பெரும்பான்மையானவர்களுக்கு சுதந்திர தினம் என்பது ஒரு விடுமுறை நாள் (இந்த முறை அதுவும் போச்சு). கொஞ்சம் பெரிய பதவியில் இருப்பவர்கள் தான் பாவம் அலுவலகம் சென்று கொடி ஏற்ற வேண்டும். தொலைக்காட்சிகளுக்கு இந்திய தொலைகாட்சி வரலாற்றில் (வரலாறை எதுயெதுககுதான் உபயோகப்படுதுரதுன்னு இல்லையா?) முதன் முறையாக சில நல்ல(?) படங்கள் ஒளிபரப்புவார்கள், மற்றும் நம் சுதந்திரதிரத்தை நினைவுபடுத்தும் (அட dressல தான்) நமீதா, நயன்தாரா போன்றவர்கள் வாழ்த்து சொல்லுவார்கள் எப்படியோ அவர்கள் கல்லா நிரம்பிவிடும். மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களுக்கு அத்துறையில் சேர்ந்ததும் சுதந்திரம் பறிபோயிருக்கும் அவர்களுக்கு சுதந்திரம் தினம் எல்லாம் இருக்காது, பலருக்கு Critical issues, UAT Stopped என்று பல மின் அஞ்சல்கள் வரும் அவர்களில் பலருக்கு சுதந்திர தினம் அலுவலகத்தில் தான். இதுல பாருங்க ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அமெரிக்கர்கள் வேலைக்கு வர மாட்டார்கள் அதனால நமக்கு ஜாலி. எதாவது கிராமங்களில் அல்லது நகரங்களில் இன்னும் இருக்கும் சுதந்திர போராளிகள் கொடி ஏற்றி மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும் சிலருக்கு இது மற்றொரு நாளே (Just another day).
சுதந்திரத்தை பற்றி அதாவது எப்படி பெற்றோம் என்பதை சுதந்திரம் பெற்று 63 வருடம் கழித்தும் பேசிகொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்த நாளின் சிறப்பை கொஞ்சம் சொல்லலாம், எப்படி சுதந்திரம் பெற்றோம், யார் யார் என்னயென்ன தியாகங்கள் செய்தார்கள் என்பதை கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாம் (கொஞ்ச நேரத்துக்கு மேல் கேட்க மாட்டார்கள்). நம் பழம் பெருமைகளை இப்போதும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஒரு நல்ல சமுதாயத்தை கட்டமைப்பது நம் அவசர தேவை. இந்த வேலையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியது ஆனால் நம் ஊரில் அதெல்லாம் சாத்தியம் இல்லை, நம்மால் முடிந்த வரை இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?

புத்தாண்டின் போது நம்மில் சிலர் உறுதி மொழி எடுப்போம், அதுபோல் இந்த சுதந்திர தினத்தில் இருந்து நம் நாடு, சமுதாயம் சம்பந்தப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை கடைபிடிப்பதாக உறுதி எடுப்போம். உதாரனமாக குப்பையை இனிமேல் குப்பைதொட்டியில் மட்டுமே போடுவது, ஒரு வழி பாதையில் எதிர் திசையில் போகாமல் இருப்பது, சாலையில் மஞ்சள் கோட்டை தாண்டாமல் இருப்பது, அவசர ஊர்தி வந்தால் அதற்க்கு போட்டியாக வண்டி ஓட்டமல் ஒதுங்கி வழி விடுவது, வசதியில்லாத ஒரு மாணவனை படிக்க வைப்பது, உங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எதாவது சொல்லித் தருவது, எதாவது ஒரு அரசாங்க சான்றிதழை நேர்மையான வழியில் பெறுவது, மக்களுக்கான எதாவது ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வது அல்லது ஒரு பிரச்சனைக்கு மனு கொடுப்பது, வாங்கும் பொருட்களுக்கு ரசீது வாங்குவது, லஞ்சம் கொடுக்காமல் இருப்பது (இதை கடைபிடிப்பவர்களுக்கு ஒரு விருது கட்டாயம் தரலாம்), இப்படி எதாவது ஒன்றோ ரெண்டோ கடைபிடிக்கலாம், மற்றவர்களையும் கடை பிடிக்க சொல்லலாம். இதெல்லாம் முடியாது என்று ஒதுக்க வேண்டாம், கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போம். தனியாக செய்வதற்கு ஆர்வம் குறையலாம், உங்கள் நண்பர்களை சேர்த்துக்கொள்ளுங்கள் ஆர்வத்தை கூட்டும், நம்மை யாரோ கவனிக்கரார்கள் என்ற உணர்வு இருக்கும். சில மாதங்களுக்கு பின் நம்மை நாம் பரிசோதித்துக்கொள்ளலாம் (Crosscheck). கொஞ்ச காலத்தில் நமக்கு அது பழக்கமாகிவிடும், பிறகு வேறொன்றை சேர்த்துக்கொண்டு அதையும் கடைபிடிக்கலாம். முக்கியமாக நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை பழக்கப்படுத்துவோம். வருடா வருடம் இதை தொடர்வோம். முயற்சி செய்வோம் ஊர் கூடி தேர் இழுப்போம்.

இந்த சுத்திர தினத்தில் நம் தேசியக்கொடியை பற்றிய சில தகவல்.
* நம் தேசியக்கொடியின் அளவு 2:3 என்ற விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்.
* சூர்யோதயத்துக்கு பின் தான் கொடியேற்ற பட வேண்டும், அஸ்தமனத்துக்கு முன் தான் இறக்கப்பட வேண்டும் (சில அனுமதிக்கப்பட்ட இடங்களில் இரவும் பறக்கின்றன).
* கொடியை ஏற்றும் போது வேகமாக ஏற்ற வேண்டும், இறக்கும் போது மெதுவாக இறக்க வேண்டும்.
* கொடியை தலைகீழாக ஏற்றவோ கையாளவோ கூடாது.
* கட்டடங்களில் பறக்கும் போது நம் தேசியக்கொடிதான் உயரமாக இருக்க வேண்டும்.
* கொடி எக்காரணம் கொண்டும் நிலத்தையோ, தண்ணீரையோ தொடக்கூடாது.
* நம் தேசிய கொடியை அவமதிபவர்களை தண்டிக்க சட்டத்தில் தனிபிரிவு (Indian flag code) இருக்கிறது.
* நம் தேசிய கீதம் 52 வினாடியில் பாடப்பட வேண்டும்.

இன்றைக்கு வந்த ஒரு மின் அஞ்சலில் சுதந்திரம் வாங்கிய அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன அவைகளில் சில கீழே.






அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

கிளிஞ்சல் 2 - மாரி என்கிற மொட்ட தாத்தா

என்னுடைய நினைவு தெரிந்த நாளிலில் இருந்து என்னுடைய 15 வயது வரையில் எங்கள் வீட்டுக்கு எதிரில் குடியிருந்தவர் மாரி. பெயர் மாரியாயிருந்தாலும் நான் என் அம்மா அப்பா அக்கா அனைவரும் மொட்டதாத்தா என்று தான் அழைப்போம். பல காலம் நான் காலை வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அவரை தான் முதலில் பார்ப்பேன்.எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த எங்கள் இடத்தில் ஒரு குடிசை அமைத்து அவரும் அவரது மனைவியும் வாழ்ந்துவந்தனர். அவர் வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் ஒரு தார் ரோடு மட்டுமே. அவருக்கும் அவர் மனைவிக்கும் பல வருடமா பேச்சு வார்த்தை கிடையாது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நான் பார்த்ததே இல்லை. அந்த குடிசையில் இரண்டு அறைகள் இருந்தன, எங்கள் வீட்டை நோக்கி இருந்த அறையில் அவரும் அதன் பக்கத்துக்கு அறையில் அவர் மனைவியும் குடியிருந்தனர். மாரி ஒரு சவரத் தொழிலாளி. கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். அந்த ஒரு அறையே தான் அவர் உறங்கும் இடமும் உழைக்கும் இடமும். நான் 12வது முடிக்கும் வரை அவரை தவிர நான் வேற யாரிடமும் முடி வெட்டிக்கொண்டதாக ஞாபகம் இல்லை. அவரிடம் தலையை கொடுத்தல் என் அம்மாவின் ஆணைப்படி ஒண்ட வெட்டிவிடுவார், கிட்ட தட்ட மொட்டை அடித்து 15 நாள் ஆனா மாதிரி இருக்கும். மறுபடியும் முடிவெட்ட இரண்டு மாதம் ஆகிவிடும்.

மாரி சமைக்கவெல்லாம் மாட்டார், யாராவது வீட்டில் வாங்கி சாப்பிட்டு கொள்வார். தனது பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சில வீடுகளுக்கு சென்று வந்தால் அவர் பாத்திரம் நிறைந்து விடும் பின்பு அவர் வயிறும். தினமும் உணவு சாப்பிடுகிறரோ இல்லையோ கண்டிப்பாக மருந்து (சரக்கு) சாப்பிட்டாக வேண்டும். தினமும் மாலை எங்கள் ஊரிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவுந்தப்பாடிக்கு கிளம்பிவிடுவார். மளிகை கடை, மருந்துக்கடை, திரை அரங்கு என்று கிட்டத்தட்ட எல்ல அத்யாவசியமான பொருளும் கிடைக்கும் இடம் கவுந்தப்பாடி. மாரி தினமும் மாலை பேருந்துலேயோ இல்லை மிதி வண்டியலேயோ கிளம்பி விடுவார். அவர் வாகனத் தேர்வு நேரத்தையும் கையிருப்பையும் பொறுத்தது. கையில் காசு கொஞ்சம் கம்மியாக இருந்தால் யாரிடமாவது வாங்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். தண்ணி அடித்துவிட்டு வரும்போது மிகவும் அமைதியாக இருப்பார் அல்லது அவர் நம்மை பார்த்து பேசாமல் அமைதியாக இருந்தால் அன்று அவர் தன்னியடித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். தண்ணியடித்துவிட்டு அவர் யாரிடமும் பிரச்சனை செய்வதோ, உலறுவதோ இருக்காது. ஓரிருமுறை அவர் மனைவியுடன் சின்ன தகராறு செய்ததாக ஞாபகம்.

அவருக்கு எப்போதும் என் மேலும் என் அக்கா மேலும் தனிப்பிரியம் உண்டு. எப்போது கவுந்தப்பாடியில் இருந்து வரும்போதும் எங்களுக்கு கண்டிப்பாக எதாவது மிக்சர் அல்லது பக்கோடா பொட்டலம் வாங்கிவருவார். அவர் கையிருப்பை பொறுத்து ஒன்றோ இரண்டோ வாங்கி வருவார். பல நாட்கள் அவர் கிளம்பும் போதே நானும் என் அக்காவும் "எங்களையும் கவனிச்சுக்க மொட்டத் தாத்தா" என்று சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அவர் எங்களுக்கு எதாவது வாங்கி வருவார், அவர் வாங்கி வராத நாட்கள் மிக சொர்ப்பமே. அந்த மிக்சர்களுக்கு தனி சுவை இருக்கும், இப்போதும் அந்த சுவை தூரத்து உறவினரை போல எப்பவாவது மனதில் வந்து போகும். அவருக்கும் எங்களுக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருந்தது, அவருடன் பழகுவதை எங்கள் வீட்டில் யாரும் தடுத்தது இல்லை.

அந்த காலங்களில் மொட்டதாத்தா கிட்ட தட்ட எங்களில் ஒருவராக இருந்தார், எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு சுவீட், காரம், காபி எல்லாம் தருவோம். அவர் கடையில் எதிரஎதிரக இரண்டு கண்ணாடிகள் இருக்கும், ஒரு கண்ணாடியின் பிம்பம் மற்றொரு கண்ணாடியில் பல ஆயிரம் பிம்பங்களாக தெரியும். கண்ணாடிக்குள் கண்ணாடிகள் இருப்பதாக தெரியும், அந்த வயதில் அது ஒரு ஆச்சர்யம். அவர் முடி வெட்டுபவர்களுக்கு தலையில் தண்ணியடிக்க ஒரு கண்ணாடி ஜாரில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார், அதன் தலையில் நீட்டிக்கொண்டிருக்கும் பைப்பை கீழ் நோக்கி அழுத்தினால் தண்ணீர் வரும், அதையெல்லாம் வைத்துக்கொண்டு விளையாடியது உண்டு. நாங்கள் செய்யும் குறும்புகளை பொறுத்துக்கொள்வார், திட்ட மாட்டார்.அவர் எங்கள் ஊரை விட்டு அதிகம் வெளியேபோனதாக தெரியவில்லை, அவருக்கு எங்கள் ஊரு தான் உலகம் போல இருந்தார். அவரை பார்க்க உறவினர்கள் எப்பவாவது வருவார்கள்.

என் வாழ்க்கையில் நான் அனுபவித்த தாத்தா பாசம் மிக குறைவு தான். என் அப்பாவின் அப்பா என் அப்பாவின் சிறு வயதிலேயே இறந்துவிட்டார், நான் பார்த்ததேயில்லை, புகைப்படத்தில் கூட. என் அம்மாவின் அப்பா எங்கள் மேல் மிகவும் பாசமாக இருப்பார் ஆனால் அவர் வீட்டுக்கு எப்பவாவது தான் செல்லுவோம், வருடா வருடம் முழு பரீட்ச்சை விடுமுறையின் போது கண்டிப்பாக செல்லுவோம், அந்த சமயத்தில் பல சொந்தங்கள் அங்கு வருவார்கள், ஒரே திருவிழா கோலமாக இருக்கும். எங்கள் தாத்தாவின் மீது எங்களுக்கு பாசம் கொஞ்சம் பயம் கலந்துதான் இருக்கும், அவரை அந்த ஊரே மரியாதை கலந்த பயத்துடன் தான் பார்க்கும், நாங்கள் பயம் கலந்த பாசத்துடன். கிட்டத்தட்ட ராஜ்கிரண் போல இருப்பார். அவர் நாங்கள் அங்கே இருக்கும் சமயத்தில் தினமும் எங்களுக்கு எதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவார், ஒவ்வொருவராக அவரிடம் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டும் அந்த தின்பண்டங்களை வாங்கி வருவோம். அவர் முத்தம் கொடுக்கும் போது அவர் மீசை குத்தும் அது ஒரு சுகம், இப்போதும் என்னால் அதை உணரமுடியும். இப்படி வருடத்தில் ஒரிருமுறையே தாத்தா பாசம் கிடைக்கும் எங்களுக்கு மொட்டதாத்தாவின் பாசம் அந்த குறையை கொஞ்சம் குறைத்தது அந்த வகையில் எங்களுக்கு அவரும் ஒரு தாத்தாவே.

சுமூகமாக இருந்த எங்கள் உறவில் விஷம் வைத்தனர் சிலர். எங்கள் வீட்டின் மேல் இருந்த கோபத்தில் எங்கள் இடத்தில் குடியிருந்த மொட்டதாத்தாவின் மனைவியின் மனதை கெடுத்து, 14 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்தால் அது அங்கிருந்தவர்களுக்கே சொந்தம் என்று சில விசமிகள் சொல்லிவிட அதனால் சில பிரச்சனைகள் வந்தன. மொட்டதாத்தா இதற்க்கு உடந்தையில்லை என்றாலும் அவரால் அதை எதிர்க்க முடியாமல் ஒதுங்கிவிட்டார். பிறகு பஞ்சாயத்து அது இது என்று கிட்ட தட்ட 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டிவிட்டு எங்கள் இடத்தை மீட்டார் என் அப்பா. அந்த சம்பவத்துக்கு பிறகு மொட்ட தாத்தாவின் மனைவி ஊரை காலி செய்துவிட்டார். மொட்டதாத்தா எங்கள் ஊரிலே ஒரு பெட்டி கடை வைத்து தன சவரத்தொழிலை தொடர்ந்து வந்தார் அப்போதும் அவருடன் ஓரளவு பேசி கொண்டுதான் இருந்தோம். சிலகாலங்கள் கழித்து கடையை எங்கள் ஊரிலிரிந்து பக்கத்து ஊருக்கு மாற்றி விட்டார். அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமக குறைந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நான் எங்கள் ஊரிலிருந்த நாட்கள் குறைவு தான், அதனால் நாள் பட நாள் பட எனக்கும் அவருக்கும்மான இடைவெளி அதிகரித்தது. கல்லூரி படிக்கும் போது ஒரு சமயத்தில் அவரிடம் நான் முடி வெட்டிக்கொள்ள சென்ற போது அவர் நினைவில் நான் மங்கிப்போயிருந்தது தெரிந்தது. முடிவெட்டி முடிக்கும் வரை நான் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, கடைசியாக தான் கண்டு பிடித்தார் அதற்காக கொஞ்சம் விசாரித்தார். இப்பவெல்லாம் நான் ஊருக்கு போகும் சமயங்களில் அவர் எங்கள் ஊர் பக்கம் வந்தாலோ இல்லை நான் அவர் ஊர் பக்கம் போனாலோ பார்ப்பேன், பேசுவது மிக குறைவு.எங்களுக்கு இடையில் இருந்த ஈர்ப்பு இப்போது ஏனோ ஏற்ப்படுவதில்லை.

இப்போதெல்லாம் யாரும் மிக்சர் போன்றவற்றை காகிதத்தில் கட்டி தருவதில்லை எல்லாம் கண்ணாடி காகிதங்கள் ஆகிவிட்டன, இப்போதும் கூம்பு வடிவிலான காகித பொட்டலங்கள் மொட்டதாத்தாவையும் அவர் வாங்கி தந்த மிகசரின் சுவையையும் நினைவுபடுத்தி கொண்டு தான் இருகின்றன.

Sunday 9 August 2009

இலக்கியமும் சினிமாவும் - பாலு மகேந்திரா உரை

எழுத்தாளர் பத்திரிக்கையாளர் ஞாநி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவர் வீட்டில்அவருடைய நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் இணைந்து கேணி என்ற இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த இரண்டு மாதமாக நடத்தி வருகிறார். பிரதி மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை நடக்கும் இந்த சந்திப்பில் எதாவது ஒரு படைப்பாளியோ வசாகரோ இலக்கியம் தொடர்பாக பேசுகின்றனர். முதல் இரண்டு மாதங்கள் எஸ் ராமகிருஷ்ணனும் பிரபஞ்சனும் பேசினார். இது எனக்கு முதல் மாதத்தில் இருந்தே தெரிந்தாலும் முதல் இரண்டு சந்திப்புக்கு செல்ல இயலவில்லை. இந்த மாதம் சென்றேன், அதாவது இன்று. இன்று "இலக்கியமும் சினிமாவும்" என்ற தலைப்பில் இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.

இதற்க்கு முன் நான் கலைஞர் கருணாநிதி நகர் சென்றதில்லை என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஞாநியின் வீட்டை கண்டுபிடிக்க முடிந்தது. அவர் வீட்டின் பின்புறம் ஒரு கேணியை சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நானும் என் நண்பன் அசோக்கும் ஒரு இடத்தில் அமர்ந்தோம். சரியாக எங்கள் தலைக்கு மேல ஒரு தென்னை மரத்தில் காய்ந்த மட்டை அபாயகரமாக தொங்கிகொண்டிருந்தது.கூட்டம் சரியாக மாலை 4:40 மணிக்கு தொடங்கியது. முதலில் பேசிய ஞாநி முன்னதாக இன்று பேசவிருந்த அசோகாமித்ரனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்றும் அதனால் அடுத்த மதம் பேசவிருந்த திரு. பாலு மகேந்திரா இந்த மாதம் பேச சம்மதித்து வந்ததிற்கு நன்றி தெரிவித்தார். அசோகாமித்ரனுக்கு இப்போது உடல் நிலை நலமாக இருப்பதாகவும் கூறினார். பிறகு திரு. பாலு மகேந்திரா "இலக்கியமும் சினிமாவும்" என்ற தலைப்பில் பேச தொடங்கினார். நான் இந்த கூட்டதிற்கு ஒரு பேனா பேப்பர் எடுத்து செல்லவில்லை, ஆகவே கொஞ்சம் சிரமப்பட்ட என்னுடைய கைபேசியில் குறிப்பெடுத்தேன். நானெடுத்த குறிப்பில் இருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. எந்த ஒரு கலைப்படைப்பிலும் இருக்கும் இரண்டு முக்கியமான விசையங்கள்
அ. உருவம் (form)
ஆ. உள்ளடக்கம் (Content)
2. உருவம் எனபது என்ன வடிவில் அந்த படைப்பு படைக்கப்படுகிறது. உருவம் தான் அவருடைய ஆற்றலை, அந்த கலையின் மீதி அவருகிருக்கும் ஆளுமையை காட்டுகிறது (ஒரு எழுத்தாளருக்கு மொழி ஆளுமையை போல).
3. உள்ளடக்கம் என்பது என்ன பொருளை என்ன கருத்தை சொல்கிறது. உள்ளடக்கம் ஒரு படைப்பாளியின் சார்புகளை, அவர் படைக்கும் படைப்பின் மீதிருக்கும் அவர் பார்வையை காட்டுகிறது.
4. ஒரு சிறு கதையை அல்லது நாவலை படமாக்கும் போது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே எடுத்து படமாக்க வேண்டும், அந்த படைப்பின் உருவத்தை எடுக்கக்கூடாது.
5. ஒரு படைப்பை படமாக்க முதல் தேவை எந்த விசையம் அந்த படைப்பை உருவாக்க படைப்பாளியை தூண்டியது அதை உணர வேண்டும். (We should understand/Feel the point which triggered the author to write that story and we should start from there)
6. எழுதிய எல்ல வற்றையும் அப்படியே படமாக்க முடியாது. எழுத்தில் கிடைக்கும் சில பரவசங்களை காட்சிகளாக்க முடியாது. உதாரனமாக சுஜாதா ஒரு கதையில் "வீட்டில் இருப்பவரிடம் பிணங்கிகொண்டு பின்புறம் முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியை போல் அந்த வீடு மற்ற வீடுகளில் இருந்து தனித்திருந்தது" என்கிறார் இதை அப்படியே யாராலும் படமாக்க முடியாது. ஒரு எழுத்தில் கிடைக்கும் பரவசம் படிப்பவரின் கற்பனையை பொறுத்து மாறுகிறது (படிப்பவரை co-creator என்கிறார்). இது படத்தில் சாத்தியமில்லை. எழுத்தில் சிலவற்றை படிப்பவரின் கற்பனைக்கு விட்டு விடலாம், படங்களில் அப்படியில்லை.
7. நான் ஒரு போதும் ஒரு படைப்பாளியின் Master Piece ஐ தொட மாட்டேன்.
8. ஒரு படைப்பு சாக வரம் பெறுவது காலத்தின் கையில் இருக்கிறது.
9. நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வரும் பாட்டி வடை சுட்ட கதை ஒரு Master Piece. பல லட்சம் குழந்தைகள் கேட்ட, கேட்டு கொண்டிருக்கும், கேட்க போகும் கதை. (முதன் முதலில் இதை சொன்னவர் யாரோ?)
10. ஒரு படைப்பாளியை அவருடைய சிறந்த படைப்பை வைத்து எடைபோட வேண்டும். (Judge a creator by his master piece).
11. ஒரு கதையை படமாக்கும் முன், அதன் உள்ளடக்கத்தை மட்டும் (Synopsis) எடுத்துக்கொள்ள வேண்டும், அது வரைக்கும் தான் அந்த கதைக்கும் நமக்குமான தொடர்பு, பிறகு நமது படைப்பாற்றலை வைத்து அதற்க்கு உருவம் கொடுக்க வேண்டும். இந்த ஊடகமாற்றத்திற்கு நமது படைப்பாற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்க்கான சுதந்திரத்தை நாம் எடுத்துகொள்ள வேண்டும், அதன் மூலத்தில் இருப்பதுபோல் அப்படியே இருக்கவேண்டிய அவசியமில்லை.
12. இந்த கூடத்தில் கலந்து கொண்டவர்களில் குறைந்த பட்சம் ஒருவர் கதாசிரியர் ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதிற்க்கான பலனை அடைந்ததாக கருதுவேன் என்றார். தமிழ் திரையுலகில் கதாசிரியருக்கு பெரிய பஞ்சம் இருப்பதாக கூறினார்.

என்னால் முடிந்த வரை திரு. பாலு மகேந்திரா கூறிய கருத்துக்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அவர் பேசிய பிறகு மாலனின் தப்பு கணக்கு என்கிற சிறுகதையை குரும்படமாக்கிய முறையை விளக்கினார். முதலில் அந்த சிறுகதை படிக்கப்பட்டது. பிறகு அந்த கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய குறும்படம் காட்டப்பட்டது (சன் தொலைக்காட்சியில் பாலு மகேந்திரா கதை நேரத்தில் ஒளிபரப்பானது). அந்த குறும்படத்தில் அவர் என்னென்ன மாறுதல்கள் செய்தார் எதையெதை அப்படியே மூலத்தில் இருந்து அப்படியே வைத்துக்கொண்டார் என்று விளக்கினார். இந்த கதை நேரத்தில் ஒரு சுஜாதாவின் சிறுகதையை படமாக்கும் போது அதன் முடிவை மாற்றி அமைத்ததையும் கூறினார்.

இதற்க்கு நடுவில் கேள்வி பதில் பகுதியும் இருந்தது. அதில கேட்கப்பட்ட கேள்விகள் சில

கேள்வி: நீங்கள் இப்போது பரிந்துரைக்கும் புத்தகம்?
பாலு: மாலனின் சிறுகதைகள்.

கேள்வி: உங்களின் படைப்புகளில் சிறந்ததாக நீங்கள் கருதுவது?
பாலு: வீடு, சந்தியா ராகம் (இந்த இரு படத்திருக்கும் இப்போது நெகடிவ் இல்லையாம்)

கேள்வி: உங்களின் படைப்புகளில் மோசமானதாக நீங்கள் கருதுவது?
பாலு: நீங்கள் கேட்டவை.

கேள்வி: நீங்கள் பார்த்தவைகளில் சிறப்பாக படமாக்கப்பட்ட நாவல்? (அடியேன் கேட்டது)
பாலு: பதேர் பாஞ்சலி.

நான் இந்த மாதிரி கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.முதல் இரண்டு நிகழ்ச்சிகளை தவறவிட்டதற்கு வருத்தப்படுகிறேன். ஒரு ஞாயிற்று கிழமை மாலை உன்னதமாக கழிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.அடுத்த சந்திப்பு செப்டம்பர் 13 அன்று நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

Saturday 8 August 2009

குமுதத்தின் சொதப்பல் பட்டியல்

5.8.2009 தேதியிட்ட குமுதத்தில் விக்ரமுடன் மோதும் ஜீவன் என்று ஒரு கட்டுரை வெளியானது அதில் விக்ரம் நடித்து வெளிவரும் கந்தசாமியும் ஜீவனின் கிருஷ்ணா லீலையும் ஒரே ஒன்லைனை அடிபடையாக கொண்டு வெளிவருவதாக கூறுகிறது அந்த கட்டுரை, இந்த இரு படங்களின் கதைகளும் ஒன்றா இல்லையா என்று படம் வந்ததும் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையில் அவர்கள் தமிழ் திரையுலகில் கதை பஞ்சம் என்றும் அதனால் பல ஹிட்டான ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு நம் இயக்குனர்கள் படம் எடுகின்றனர் என்றும் கூறுகிறது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை, இந்த கட்டுரையின் ஒரு பகுதியாக ஒரு பட்டியலை வெளியிடிருகிறார்கள் அது எந்த ஹாலிவுட் படத்தை சுட்டு என்ன தமிழ் படம் வந்திருக்கிறது என்று, பிரச்சனை இதுதான்.இந்த பட்டியலில் 17 படங்கள் இடம்பெற்றிருகின்றன "இது ஒரு சாம்பிள் தான், பட்டியல் இன்னும் நீளம்" என்ற குறிப்புடன்.

ஹாலிவுட் படங்களின் கதைகளை அப்படியே தழுவியோ அல்லது அதை ஒரு Inspiration ஆக வைத்தோ பல படங்கள் வந்திருகின்றன வருகின்றன அதை மறுப்பதற்கு இல்லை. இவர்கள் வெளியிட்டிருக்கும் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்த பட்டியலில் ஹாலிவுட் படங்களை ஒரிஜினல் என்றும் அத்துடன் ஒப்பிடப்படிருக்கும் தமிழ் படத்தை சுட்டவை என்றும் குறிப்பிடிருகின்றனர். ஆக அவர்கள் அந்த பட்டியலில் குறிப்பிடிருக்கும் அணைத்து தமிழ் படங்களும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை (அது யாருக்கு வேண்டும் என்கிறீர்களா?). இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில படங்களை பற்றி கிழே.

மகாநதி:Hardcore
மகாநதி கமல் ஹாசனின் ஒரு முக்கியமான படம். அது ஒரு வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. கிராமத்தில் வசதியாக வாழும் கமலை ஹனீபா தான் நடத்தும் சிட்பண்டு தொழில் சேர்த்து கொண்டு அவரை ஏமாற்றிவிடுகிறார். அதனால் ஜெயிலில் அடைக்கப்படும் கமல் பிறகு வெளியே வரும்போது தன் சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார். தன் மகளை ஒரு விபச்சார விடுதியில் கண்டுபிடித்து மீட்கிறார். பிறகு இந்த நிலைக்கு காரணமானவர்களை கொன்று விட்டு மீண்டும் ஜெயிலுக்கு போகிறார். இந்த படத்தை இயகியிருப்பவர் சந்தான பாரதி.

Hardcore என்ற ஆங்கிலப்படத்தின் கதை, ஒரு தொழிலதிபர் காணமல் போன தன்னுடைய மகளை தேடுகிறார். தேடல்களுக்கு பிறகு அவர் மகளை ஒரு ஆபாச படமெடுக்கும் கும்பலிடமிருந்து மீட்கிறார்.எந்த வகையில் இந்தப்படத்தை பார்த்து மகாநதி எடுத்திருப்பார்கள் என்று குமுதம் தான் விளக்க வேண்டும். இந்த இரு படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த கதை நாயகர்களின் மகள்கள் ஆபாசமான தவறான செயலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது மட்டுமே, இதை மட்டும் வைத்துக்கொண்டு மகாநதி Hardcore என்ற படத்தை சுட்டு எடுத்தது என்றால் மடத்தனம்.

அபூர்வ சகோதரர்கள்:The Corsican Brothers
The Corsican Brothers படத்தில் கொலை செய்யப்பட தங்களது பெற்றோர்களை சிறு வயதிலேயே பிரிக்கப்பட்ட சகோதரர்கள் 20 வருடம் கழித்து சேர்ந்து கொலையாளிகளை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை.

அபூர்வ சகோதரர்கள் படமும் கிட்ட தட்ட இதே போல் ஒரு கதைதான் என்றலும் பல வேறுபாடுகள் இருகின்றன ஆங்கில படத்தில் குள்ள ஹீரோவெல்லாம் இல்லை. இதில் நம் குள்ள கமல் தான் பழி வாங்குகிறார் இன்னொரு கமல் அதன் மூலம் வரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கடைசியில் அனைவரும் ஒன்று சேருகின்றனர். இருபடங்களுக்கும் ஒரே ஒற்றுமை இரண்டும் தன் பெற்றோரை கொன்றவர்களை பழி வாங்கும் கதை, இதை அடிபடையாக வைத்து பல மொழிகளிலும் பல படங்கள் வந்துவிட்டன இன்னும் வரும். இந்த படத்தின் சிறப்பு குள்ள கமல் தான், அந்த கதாப்பாத்திரத்தை எப்படி படமாக்கினார் என்பது இன்னும் பலருக்கு தெரியாது.

விருமாண்டி:Life of David Gale
Life of David Gale இந்த படத்தின் நாயகன் மரண தண்டனைக்கு எதிராக போராடுகிறார், ஆனால் அவரே ஒரு கொலை குற்றத்தில் மாட்டி மரண தண்டனை விதிக்கப்படுகிறார். அவரை மரண தண்டனைக்கு சில நாள் முன் பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் (Kate Winslet) வருகிறார் அவருக்கு சில ஆதாரங்கள் கிடைக்க அவர் மேலும் துப்பறிந்து நாயகனை நிரபராதி என்று நிருபித்து விடுதலை செய்கிறார்.

விருமாண்டியில் ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கையாளரிடம் நடந்ததை அவரவர் பார்வையில் கூறுகின்றனர். இந்த படத்தில் முதன்மையாக கூறப்பட்டிருப்பது விருமாண்டி, கொத்தாளன் மற்றும் நாய்கர் இடையே நடக்கும் சண்டையும் சூதும் தான், இந்த படத்தின் ஆரம்பத்திலும் முடுவிலும் மட்டுமே மரணதண்டனைக்கு எதிராக பேசுகிறார்கள். இது மட்டும் தன் இந்த படத்துக்கும் Life of David Gale படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் அதற்காக விருமாண்டியை இந்த படத்தை பார்த்து கமல் எடுத்தார் என்பதெல்லாம் ஒத்துகொள்ள முடியவில்லை.

இந்த மாதிரி இரு படத்திற்கும் சிறு ஒற்றுமையை வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்து அந்த படம் எடுக்கபட்டது என்பது ஏற்புடையதல்ல. அப்படி பார்த்தால் இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு காட்சியோ இல்லை எதாவது ஒன்றோ வேறேதோ படத்தில் இருக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம் நம் பட்டியலில் எல்லாம் இடம் பத்தாது.

இந்த மாதிரி சின்ன ஒற்றுமைகள் (தமிழ் படத்தில் இருப்பவை) ஆங்கில படத்திலும் இருக்கும். உதாரணமாக உலகமே போற்றிய Titanic படத்தில் ஒரு ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல் வருவதும் பின்னர் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் காட்டப்பட்டிருக்கிறது. நம் தமிழ் சினிமாவில் இதை அடிப்படியாக கொண்டு பல படங்கள் வந்துவிட்டன, அதனால் Titanic படத்தை தமிழ் படத்தை பார்த்து எடுத்தனர் என்று சொல்லலாமா என்ன? இது மாதிரி பல உதாரணங்கள் கிடைக்கும்.

எல்லா மொழிகளிலும் வேறொரு மொழிப்படத்தை தழுவியோ அல்லது Inspiration ஆக கொண்டோ படங்கள் வந்து கொண்டுதான் இருகின்றன, அப்படி எடுக்கப்படும் படங்கள் பார்பவர்களுக்கு எதாவது ஒரு செய்தியோ மகிழ்ச்சியோ தரும் வரைக்கும், அவர்கள் எடுக்கும் படத்தை சொதப்பாத வரைக்கும் எந்த தவறும் இல்லை (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல).

குமுதம் போன்ற பலமான வாசகர் வட்டம் உள்ள ஏடுகளில் எந்த ஆராய்ச்சியும் ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் ஒரு பட்டியலை வெளியிடுவது அழகில்லை. இதை படிப்பவர்களுக்கு நம் படைப்பாளிகள் மேல இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும். முடிந்தால் பல விசயங்களை ஆராய்ந்து ஒரு தரமான பட்டியலை வெளியிடலாம் இல்லையேல் அந்த பக்கத்தில் ஒரு கவர்ச்சி படம் போட்டு நிரப்பி விடுங்கள் யாருக்கும் தொல்லையில்லை.

Wednesday 5 August 2009

அரசு அலுவலகத்தில் அரை நாள்

கடந்த வாரம் அரசு சார் நிலை கருவூல (sub treasury) அலுவலகத்துக்கு சென்றிந்தேன் அந்த அனுபவமே இந்த பதிவு.

நான் அந்த அலுவலகம் செல்ல கரணம் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் LCS ஒப்பந்தம் ஒன்றில் இருபது ரூபாய் மதிப்புள்ள முத்திரை (Stamp) பெற்று வருமாறு கூறினர். அதற்க்காக நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கமாக இருக்கும் பனகல் மாளிகைக்கு சென்றேன், நான் சென்ற போது காலை 10 மணி அப்போதுதான் அலுவகத்திற்கு அலுவலர்கள் வந்துகொண்டிருந்தனர். அங்கு விசாரித்த போது அது மேலாண்மை அலுவலகம் என்றும் அங்கு முத்திரை இடமாட்டார்கள் என்றும் சின்ன மலை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார் நிலை கருவூல அலுவலகத்துக்கு சென்றால் கிடைக்கும் என்றும் கூறினர். ஆகவே ஒரு M7 ஐ பிடித்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சின்ன மலை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றேன். அங்கு நுழைந்ததும் சில வக்கீல்கள் notaryயா என்று கேட்டுக்கொண்டு கிட்ட தட்ட ஓடிவந்தனர் நான் அவசரமாக மறுத்துவிட்டு கருவூல அலுவலகம் எங்கு இருக்கிறது என்றேன், ஒரு வக்கீல் இந்த வழியில் போனால் வரும் என்று வேண்டா வெறுப்பாக ஒரு பாதையை காட்டினார். அது வழக்கு நடக்கும் ஒரு வளாகத்தை ஒட்டி சென்றது அங்கு அடுத்த நடக்க போகும் வழகிற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வளாகத்தை தாண்டியதும் இருந்த இடம் அப்பப்பா நீதி மன்றதிற்க்குள் இப்படி ஒரு இடமா? பழைய இரும்பு பொருட்கள், தகரங்கள், ரப்பர் டியுப்புகள் மற்ற கண்டதுகளும் கிடந்தன. அதை ஒட்டிய ஒரு சுவரை உடைத்து ஒரு வழி செய்திருந்தனர், அதன் வழியே சென்றேன், அந்த பாதையில் 20 நடை வைப்பதற்குள் நான் தேடிய அலுவலகம் இருந்தது. இந்த அலுவகத்திற்கு ஒரு நல்ல பாதை இருந்தது அப்போதுதான் தெரிந்தது, ஏனோ நம் வக்கீல்கள் நல்ல பாதையையே காட்டுவதில்லை.

அங்கு சென்றால் ஒரு காவலதிகாரி நாளிதழ் படித்து கொண்டிருந்தார். உள்ளே இரண்டு அலுவலர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரிடம் விஷயத்தை கூறினேன் அவர், நான் கூறியதை ஒரு கடிதமாக எழுதி அதில் 2 ரூபாய் மதிப்புள்ள court fees அஞ்சல் தலை ஒட்டி தர சொன்னார், அவரே அஞ்சல் தலை இவ்வலுவலக பின்புறத்தில் கிடைக்கும் என்றார். அங்கு சென்றால் 2 ரூபாய் court fees அஞ்சல் தலையை 3 ரூபாய் பெற்று கொண்டு கொடுத்தனர். பின்னர் நான் கொண்டுவந்திருந்த ஒரு வெள்ளை தாளில் ஒரு கடிதம் எழுதி கொடுத்தேன் (அரசு அலுவலகத்திற்கு செல்பவர்கள் கண்டிப்பாக சில வெள்ளை தாள்கள், பேனா, பசை போன்றவற்றை பள்ளிக்கூடத்தில் பரீட்சைக்கு எடுத்து செல்வது போல எடுத்து செல்லுங்கள் சில தலைவலிகள் குறையும்). கடிதத்தை பெற்றுக்கொண்டு ஒரு சலானை (chalan) கொடுத்து நிரப்பி தர சொன்னார் (20 ரூபாய்க்கு), அதை நிரப்பி கொடுததும் அதை கொண்டு ஒரு வங்கியில் பணம் கட்ட வேண்டும் என்றனர் நானும் ஏதோ பக்கத்தில் இருக்கிற வங்கி தான் என்று சரி கட்டிவிட்டு வருகிறேன் என்றேன், அதற்கு அவர் பக்கத்து வங்கியில் கட்டக்கூடாது என்றும் தேனாம்பேட்டையில் இருக்கும் SBI யில் தான் கட்ட வேண்டும் என்றார் அடபாவிகளா சின்ன மலையில் இருக்குற ஒரு அலுவலகத்திற்கு பணம் கட்ட தேனாம்பேட்டை போகனுமா? சரி என்று பேருந்தில் போக கடுப்பாக இருந்ததால் ஒரு auto பிடித்து 40 ரூபாய் கொடுத்து தேனாம்பேட்டை ஈ வெ ரா மாளிகையில் உள்ள SBI வங்கியில் 20 ரூபாய் கட்டிவிட்டு, திரும்பி 23C ஐ பிடித்து மறுபடியும் அந்த அலுவலகதிருக்கு சென்று பணம் கட்டிய ரசீதை கொடுத்தேன், அதை பெற்று கொண்டவர் மாலை 6 மணிக்கு வந்து முத்திரையை பெற்றுகொள்ளுமாறு கூறினார், நான் அதெல்லாம் முடியாது என்றும் உடனே வேண்டும் என்று கூறினேன் உடனே அவர் அதற்க்கு கொஞ்சம் செலவாகும் என்றும் உள்ளிருப்பவர் (உயர் அதிகாரி) எதிர்பார்ப்பார் என்றும் கூறினார். நானும் வேற வேலைகள் இருந்ததால் அவர் கேட்ட 50 ரூபாயை கொடுத்தேன், பணம் கொடுத்த இரண்டாவது நிமிடத்தில் 20 ரூபாய் முத்திரையிடப்பட்ட என்னுடைய LCS ஒப்பந்தம் கைக்கு வந்தது. நான் திரும்பி வரும் போது முதலில் பார்த்த வழக்கு நடக்கும் வளாகத்தில் இப்போது கூட்டம் அதிகமாகி பலர் பரபரப்பாக காணப்பட்டனர்.

ஆக ஒரு 20 ரூபாய் முத்திரை பெறுவதற்கு நான் செய்த செலவு 120 ரூபாயும் மூன்று மணிநேரமும். லஞ்சம் கேட்பவர்களை பற்றி புகார் செய்வதற்கு அரசாங்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கிறது, அவர்களிடம் புகார் செய்தால் உடனே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்தும் அவர்களிடம் புகார் கூற தைரியம் ஏனோ வரவில்லை.