Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Sunday, 26 July 2009

இந்த வர காமெடி - தூய்மையான முதல்வர்

"இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும்", இப்படி கூறியிருப்பது நம் தமிழக முதல்வர் கலைஞர். கடந்த வாரம் தமிழக அரசு 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்ட தொடக்க விழாவில் இவ்வாறு பேசியிருக்கிறார் நம் முதல்வர். இது ஒரு நல்ல திட்டம், நம் நாட்டில் கிட்டத்தட்ட 90% பேருக்கு மருத்தவ காப்பீடு இல்லை. அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் பெரும்பாலோர்க்கு மருத்தவ காப்பீடு உள்ளது அதனால் அவர்கள் மருத்தவமனைகளில் பணம் எது தராமலே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும், நம் நாட்டில் அதெல்லாம் கனவு தான், அந்த கவை நோக்கிய முதல் படியாக இத்திட்டத்தை நாம கருதலாம் சொன்னபடி நிறைவேற்றப்பட்டால். இந்த பதிவு அது பற்றியது இல்லை.

இந்த விழாவில் கலைஞர் கூறியிருப்பது "பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும்; பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் கோபாலபுரத்தில் தற்போது நான் வசிக்கும் ஒரு வீடும் திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் பதினான்கு ஏக்கர் நிலமும் தான் உள்ளது. இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல்-அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்". இதை படித்த பொது எனக்கு தோன்றியது "எங்களை வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே" வசனம் தான். இதை பேசும் பொது நாம என்ன பேசுகிறோம் என்று உணர்ந்துதான் பேசினாரா, இப்படியெல்லாம் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்று தெரியாமல் பேசினாரா, இல்லை என்ன பேசினாலும் நம் தமிழக மக்கள் நம்புவார்கள் என்று பேசினாரா என்று தெரியவில்லை.

பொது வாழ்கையில் தூய்மை வேண்டுமென்று கூறியிருக்கிறார் (Note பண்ணிகங்கப்பா)
அரசியலில் தூய்மை என்ற வழக்கு காமராஜருக்கு அப்புறம் நம் அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்பட்டது என்றே இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருதேன் இப்போதுதான் தெரிகிறது அது நீக்கப்படவில்லை என்று ஆனால் அர்த்தம் மட்டும் மற்ற்யிருப்பார்கள் போல. தன்னுடைய இத்தனை வருட பொது வாழ்வில் அவரால் வாங்க முடிந்த சொத்து என்று இரண்டை குறிபிட்டிருக்கிறார். மத்ததெல்லாம்? என்கிற உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது ஆனால் கண்டிப்பாக கலைஞரக்கு கேக்காது.

ஒரு வேலை இவர் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது அவர் கூறியிருப்பது அவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் இந்த இரண்டு தான் என்று, மற்ற சொத்துக்கள் எல்லாம் மற்றவர்கள் பெயரில் வாங்க்யிருப்பார் போல. இதையெல்லாம் அவரிடம் கேட்டால் "நான் நடந்து வந்த பாதையில் கூவும் குயில் இல்லை நரி இருந்தது" என்றோ "அகர முதல..." என்று திருக்குறளோ சொல்லிவிட்டு போய்விடுவார் நாம என்ன சொன்னாரென்று புரியாமல் முழிக்க வேண்டியதுதான் (இவர் கடைசியாக எந்த கேள்விக்கு நேரடியான பதில் கூறினார் என்று கூறினால் அவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்க படும்).

தன்னுடைய ஒரு வருத்தத்தையும் இந்த கூடத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் அது "இன்னும் சாதரண தெருவில்" வசிக்கிறார் என்று. இத்தனை வருட தூய்மையான அரசியல் வாழ்கையில் பாவம் அவரால் ஒரு பங்களாவில் வாங்க முடியவில்லை அல்லது தங்கமுடியவில்லை,ஒரு பிரச்சினை என்றவுடன் இரவோடு இரவாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசையே ஆரம்பிக்க முடிஞ்ச நம் தூய்மையான முதல்வரால் பாவம் ஒரு பங்களா வாங்கமுடியவில்லை. ஒரு வேலை தன்னுடைய மகன்கள் மகள்கள் மருமகள்கள் மருமகன்கள் பேரன்கள் பேத்திகள் மற்றும் பலருக்கு அணைத்து சொத்தும் கொடுக்கப்பட்டதால் இவருக்கு பங்களா கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி அல்லது யாராவது ஒரு மகனோ அல்லது ஒரு மகளோ அவருக்கு உடனடியாக பங்களா தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இல்லையேல் நம் தூய்மையான முதல்வரின் இந்த ஆசை நிறைவேறாமலையே போய்விடும்.


இன்னும் எத்தனை நாளைக்கு நம்மளை வச்சு காமெடி பண்ண போராங்களோ! ஆண்டவா!!!