இந்த முறை விடுமுறையில் ஊருக்கு சென்ற பொது நான் கேள்விப்பட்ட இரண்டு செய்திகளை பற்றி இந்த பதிவு.
சம்பவம் 1:
என்னுடைய பள்ளி கால நண்பனை பற்றி, நான் பள்ளியில் படித்த நேரத்தில் எங்கள் ஊரில் சம வயதை சேர்ந்த ஒரே நண்பன் அவன். நாங்கள் வேறு வேறு பள்ளி என்றாலும் ஒரே வகுப்பு படித்து வந்தோம். வார இறுதி நாட்களில் பெரும்பாலும் ஒன்றாக ஓரணியில் கிரிக்கெட் விளையாடுவோம். அவன் ஓரளவு நன்றாகவே படித்து வந்தான். விடுமுறை நாட்களில் பெரும்பாலும் நான் அவன் வீட்டிலோ இல்லை அவன் என் வீட்டிலோ தான் இருப்போம். பள்ளி படிப்பு முடிந்த உடன் நான் B.E. படிப்பதற்கு ஊரை விட்டு வந்து விட்டேன், கல்லூரி நாட்களில் நான் விடுமுறையில் ஊருக்கு செல்லுகிற சமயத்தில் பெரும்பாலும் அவனை பார்க்க முடியாது, எப்பவாவது பார்த்தாலும் வெறும் நலம் விசாரிப்பதோடு சரி. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போது அவனை பற்றி கெட்ட செய்திகளே வந்தன, அவனை பார்ப்பதும் அரிதாகவே இருந்தன. அவன் கரூரில் இருக்கிறான் என்றும், ஏதோ அரசாங்க அமைப்பில் இருக்கிறான் என்றும், முடித்திருத்தும் தொழில் செய்கிறான் என்றும் பலவாறு செய்திகள் வந்தன. ஆனால் இந்த முறை அவன் ஏதோ பெரிய கையாடல் செய்துவிட்டதால் அவனை கடத்திச் சென்றுவிட்டனர் என்றும் பிறகு ஒரு தொகை கொடுத்து மீட்க்கப்பட்டன் என்றும் கூறினர்.
எட்டு வருடத்திருக்கு முன் இவன் வாழ்க்கை இப்படி போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, பள்ளி படிப்பு வரை நன்றாக படித்து கொண்டிருந்தவான் ஏன் இப்படி ஆனான்? எனக்கு தெரிந்த காரணங்கள் :
1. சேர்க்கை - பள்ளியில் அவனுக்கு அமைந்த நண்பர்கள் மாதிரி அமையாமல் போயிருக்கலாம்.
2. சூழ்நிலை - பள்ளியில் படிக்கும் போது இருந்த நல்ல சூழ்நிலை மாறியிருக்கலாம். ஒரு காலத்தில் அவனை சுற்றி நல்லதாக நடந்தது வந்தது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கும், அந்த மாற்றத்திற்கு தகுந்தார் போல் அவனும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருப்பான்.
3. பெற்றோர் - மகன் போக்கில் சில கெட்ட சகுனங்கள் தெரியும் போதே அவர்கள் கண்டித்து திருத்தி இருக்கலாம் , எல்லாம் சரி ஆகிவிடும் என்று
இருந்திருந்தால் அதனுடைய விளைவு இது. அல்லது அவனை கண்டித்தும் பயனில்லாமல் போயிருக்கலாம்.
சம்பவம் 2:
எங்கள் ஊரில் பெரும்பாலும் ஆறாவது ஏழாவதுக்கு மேல் யாரும் படிப்பதில்லை, படிப்பை நிறுத்திவிட்டு எதாவது வேலைக்கு போக ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த சில வருடங்களாக பனியன் கம்பெனிகளுக்கு அதிகம் போகின்றனர். அப்படி பொய் கொண்டிருந்த இரண்டு பேர் பக்கத்து ஊரில் ஒரு சிறுமியிடம் விஷமம் செய்ததாக பிடிபட்டு அடிபட்டனர். நான் பள்ளி முடித்து கல்லூரி செல்லும்முன் இருந்த இடைவெளியில் ஒரு மாதம் எங்கள் ஊரில் டியூஷன் எடுத்தேன், அப்போது இவர்களும் வந்து படித்தனர். அந்த டியூஷன் எடுக்கும் போதுதான் இவர்களுக்கு என்ன தெரிகிறது என்ன தெரியவில்லை என்று புரிந்தது. பொதுவாக யாருக்கு படிக்கும் ஆர்வம் இல்லை, ஐந்தாவது படிப்பவர்கள் கூட படிப்பதற்கே சிரமப்பட்டனர், அவர்கள் எதையும் படிப்பதில்லை, கல்வியின் பயன் அவர்களுக்கோ அவர்கள் பெற்றோருக்கோ தெரியவில்லை. அந்த மாணவர்களில் ஓர்இருவர் நன்றாக படித்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் சில காலத்தில் படிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் குல தொழிலுக்கோ அல்லது பனியன் கம்பெனிக்கோ போய்விட்டனர்.
சரியான வழிகாட்டல் இருந்திருந்தால் இவர்களில் சிலராவது இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கலாம், எனக்கு என் அப்பாதான் எல்லாம். எனக்கு அவர் காட்டிய வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் நானும் இன்று எதாவது பனியன் கம்பெனியில் இருந்திருப்பேன். என்னை போன்றவர்களுக்கு கிடைத்த வழிகாட்டி நம் நாட்டில் அதுவும் கிராமங்களில் மிக மிக குறைந்த அளவே கிடைகின்றன, அதை பயன் படுத்திகொள்வோர் இன்னும் வெகு சிலரே.
மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவதிருக்கு இந்த சமுதாயம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது, நான் சமுதாயம் என்றும் குறிபிடுவது அந்த ஊர், ஊர் மக்கள், பள்ளிகள், ஆசிரியர்கள், நீங்கள், நான் அனைவருமே. சரியான சமுதாய போக்கை அல்லது சூழ்நிலையை ஏற்படுத்தி தர ஆட்சியில் இருபவற்கோ, அரசாங்க அதிகாரிக்கோ, பள்ளி ஆசிரியர்களுக்கோ யாருக்கும் நேரம் இல்லை. இக்காலத்தில் இதை எல்லாம் இவர்கள் செய்யவேண்டும் என்று நாம் நினைப்பதே பவ செயலாகும். கண்டிப்பாக இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த சூழ்நிலை மாறப்போவது இல்லை.
இதற்கு தீர்வு?
இதற்கு தீர்வெல்லாம் எனக்கு தெரியவில்லை, அப்படியே தெரிந்தாலும் நாமே அதை நிறைவேற்ற வேண்டுமே தவிர யாரை நம்பியும் புண்ணியம் இல்லை. என்னளவில் நான் செய்யப்போவது வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு 5 பேரையாவது மேல வர உதவி செய்ய வேண்டும், அப்படி மேல வருபவர்களுக்கும் இந்த எண்ணத்தை புகட்ட வேண்டும். இதை செய்ய முடிந்தால் நான் வாழ்வதற்கு அர்த்தம் இருக்கும்.
Saturday, 31 January 2009
Sunday, 18 January 2009
32 வது சென்னை புத்தகக்காட்சி
பொங்கல் அன்று நான் புத்தகக்காட்சிக்கு சென்று இருந்தேன், சென்னையில் நான் செல்லும் இரண்டாவது புத்தகக்காட்சி இது. நல்ல கூட்டம், அனைத்து கடைகளையும் பார்ப்பதற்கு கண்டிப்பாக ஒரு நாள் வேண்டும். நான் பாதி மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். எத்தனை புத்தககங்கள், எத்தனை கடைகள், பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா புத்தகங்களும் கிடைக்கும். இந்த முறை 500 மேற்பட்ட கடைகள் வைத்திருப்பதாக கூறினார்கள். பல மொழிகளில் பல தலைப்புகளில் புத்தககங்கள் கிடைக்கின்றன. கல்கி எழுதிய சில காவியங்களை சிறப்பு சலுகையில் கிடைத்தன. மக்கள் புத்தகம் வாங்குவதைப் பார்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது (மனைவியை எதாவது கோலப்புத்தகம் வாங்கலியா என்று கேட்ட கணவன்களும் வந்திருந்தார்கள்).
புத்தககங்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்வார்கள், இன்றைய காலகட்டதில் புத்தககங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக தோன்றுகிறது, பல தமிழ் இலக்கியங்களை படிக்காமல் நம் வாழ்வை வீனடிதுக்கொண்டிருகிறோம். நம் வருங்கால சந்ததியினர்க்கு நம் இலக்கிய வளமை தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி புத்தகக்காட்சிகள் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும், நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் வீட்டில் இருப்பவர்களை படிக்க தூண்ட வேண்டும் குறிப்பாக சிறுவர்களை. குழந்தைகளை நாம் இந்த மாதிரி புத்தகக்காட்சிகளுக்கு அழைத்து சென்று பழக்க வேண்டும், நம் இலக்கிய செல்வங்களை நாம் அவர்களுக்கு அறிமுகபடுத்த வேண்டும். நல்ல புத்தககங்கள்களை அவர்களுக்கு நாம் அறிமுகபடுதிவிட்டால் அவர்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். இப்போதிருந்தே நாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தா விட்டால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பை நாமாக ஏற்படுத்துகிறோம். சுஜாதா, ராமகிருஷ்ணன் போன்றோர் சிறுவர்களுக்கு என்று கதைகளை எழுதி இருக்கிறார்கள், அந்நூலை நாம் அவர்களுக்கு அளித்து படிக்க வைக்க வேண்டும். அவர்கள் பள்ளி படத்தில் உள்ள பாடல்களை முடிந்தவரை படித்து விளக்கி புரிய வைக்க வேண்டும் (இந்த வேலையயை வெகு சொற்ப பள்ளிகளே செய்கின்றன).
வருடம் ஒருமுறை ஆடி தள்ளுப்படிக்கு துணி வாங்குகிறோமோ இல்லையோ ,அட்சயதிதி அன்று தங்கம் வந்கோகிறோமோ இல்லையோ கண்டிப்பாக புத்தகக்காட்சிக்கு சென்றும் புத்தககங்கள் வாங்குவோம் என்றும் உறுதி கொள்வோமாக.
இந்த முறை புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தககங்கள்:
இந்தியப் பிரிவினை - மருதன்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் (சாகித்திய அகாடமி பதிப்பகம்)
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
பூக்குட்டி - சுஜாதா (சிறுவருக்கான நூல்).
இலக்கிய பேராசான் ஜீவாவை பற்றி நெல்லை கண்ணன் சிறப்புரை குறுந்தகடு.

Labels:
புத்தகக்காட்சி,
புத்தகம்
Subscribe to:
Posts (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)