Monday 2 November 2009

சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass)

சனிக்கிழமையன்று எங்கள் அறையிலிருக்கும் அனைவரும் சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass) செல்ல திட்டமிட்டிருந்தோம். சுநோகால்மி கணவாய், இனி மேல் சு.க. சு.க. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 50 மைல் தள்ளி, சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கும் இடம். அதன் சிறப்பு பனி, மலை முழுவதும் பனி படர்ந்திருக்கும். சியாட்டல் சுற்றி இருக்கும் மக்களுக்கு நல்ல சுற்றுலா தளம் மற்றும் பனி சறுக்கு விடும் இடம். வானிலையெல்லாம் சரி பார்த்துவிட்டு, பனி இருக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் கிளம்பினோம். 9 மணிக்கு கிளம்ப திட்டமிட்டு வழக்கம் போல் ஒரு மணிநேரம் தாமதமாக கிளம்பினோம். எங்கள் நண்பர் ரகு வழிகாட்ட (Navigator), கணேசன் மகிழுந்தியை செலுத்த அறையிலிருந்த ஐவரும் கிளம்பினோம். சுமார் ஒரு மணி நேரப்பயணம், 11:30 மணியளவில் சு.க.வை அடைந்தோம்.



நாங்கள் நினைத்தது போல் ஏராளமான மக்கள், பல மகிழுந்திகள், மலை நிறைய 3 இன்ச் அளவுக்கு பனி என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது சு.க. விசாரித்ததில் ஒரு வாரம் முன்பு 2 இன்ச் அளவில் பனியிருந்ததாகவும், சில நாட்களாக பெய்த மழையில் எல்லாம் கரைந்து விட்டதாக கூறினர். சரி, பனியில்லாட்டி என்ன, என்று மனதை தேற்றிக்கொண்டு, அனைவரும் அந்த இடத்தை சுற்றி ஒரு வலம் வந்தோம். அங்கு ஓரமாக ஒரு பெரிய அரிசி மூட்டை அளவில் இருந்த பனியை எடுத்து விளையாடி விட்டு, கிளம்பினோம், நாங்கள் மட்டும் அப்படியில்லை, அங்கு வந்திருந்த இந்த ஊர்காரர்களும், எங்களைப் போல், இருந்த துக்குளியூண்டு பனியில் விளையாடினர், அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கத்தானே செய்கிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பி North Bend என்னும் வணிக வளாகம் சென்றோம். வாங்குகிறோமோ இல்லையோ பல கடைகள் ஏறி இறங்கினோம், சில கடைகளில் வாங்கினோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேறு கடைகளை சுற்றி விட்டு ஒரு இந்திய உணவகத்தில் தோசை, கொத்து பரோட்டா என்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். பார்த்த (?) இடத்தை விட பயணம் நன்றாக இருந்தது, We enjoyed the drive.

கடந்த வாரம் பதிவர் அனன்யா பல்பு வாங்கிய அனுபவங்களை பற்றி பதிவு எழுதியிருந்தார், இது நான் வாங்கிய பல்பு. இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே.















3 comments:

Ananya Mahadevan said...

இப்போதெல்லாம் உங்கள் பக்கங்கள் படிப்பதற்கு மிகவும் Crispபாக இருக்கிறது. சுவையான தகவல்களை நல்ல தரமான படங்களுடன் விளக்குவதால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது
இது போன்ற பதிவுகள் நிறைய எழுதவும்

Balajiviswanathan Veeraraghavan said...

வானிலை சரிபார்த்த நீங்கள் கொஞ்சம் சு . க வின் நிலை பற்றி இணையத்தில் சரி பார்திருக்கலாம்
சரி நாம் இப்படி பல இடங்களுக்கு போன பொது ஏன் உனக்கு அதை பதிவிட தோன்றவில்லை ?

Annamalai Swamy said...

அப்பவெல்லாம் நான் வலைப்பூவே ஆரம்பிக்கல, இப்ப தான் கொஞ்ச நாளா பதிவு போட்டிட்டு இருக்கேன், அதான் அதெல்லாம் பதிவிடவில்லை. அடுத்த தடவை நாம போகும் போது, கண்டிப்பாக அதைப்பதிவிடுவேன்.