Sunday 20 December 2009

இரண்டு ஏரிகளும், ஒரு பனிமலையும்

தலைப்பை பார்த்ததும் ஏதோ கவிதை என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். கடந்த நன்றி தெரிவிக்கும் விடுமுறையில் நாங்கள் சுற்றி பார்த்த இரண்டு ஏரி, ஒரு கடற்கரை, ஒரு பனி மலை பற்றியே இந்தப்பதிவு. சனியன்று காலை வழக்கம்போல ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பினோம். இந்த முறையும் ரகுவின் வழிகாட்டலில், Ganny (கணேஷ்) வண்டியை செலுத்த நாங்கள் பின்னாடி அமர்ந்து மொக்கை போட்டுகொண்டு சென்றோம். எங்கள் பயணம் சிறு தடங்களில் ஆரம்பித்தது, வீடிற்கு அருகில் இருக்கும் சாலையில் Take Right என்று GPS அக்கா சொன்னதை கேக்காமல் இடது பக்கம் திரும்பி கொஞ்சம் சுத்திவிட்டு பிரதான சாலையை (Freeway) பிடித்தோம்.

நாங்கள் திட்டமிட்டிருந்த இடங்கள் அனைத்தும் ஒலிம்பிக் நேஷனல் பாரஸ்ட்டை சுற்றிய அமைந்திருந்தன, எங்கள் பயணமும் . சுமார் 3 மணிநேர பயணத்துக்கு பிறகு நாங்கள் Quinault ஏரியை அடைந்தோம். அழகான ஏரி, ஏரிக்கு முன் கொஞ்சம் பசுமையான புல்வெளி இருந்தது. ஏரியை ரசித்து விட்டு, சில பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த ஏரிக்கு அருகில்1000 வருடம் பழமையான, உலகின் மிகப்பெரிய Spruce மரம் உள்ளது. இங்கு வருபவர்கள் தங்குவதற்கு விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. காதல் ஜோடிகள் நேரம் கழிக்க சிறந்த இடம்.

Quinault ஏரி


அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் kalaloch கடற்கரை, பசிஃபிக் பெருங்கடலின் ஒரு கடற்கரை. நாங்கள் சென்ற நேரம் மழை பெய்துகொண்டிருந்தது, நனைந்தபடியே கரையில் திரிந்தோம். நிறைய கற்பாறைகள் நிறைந்த கடற்கரை, சின்ன பாறைகள் மீது ஏறி கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம், அலைகள் பெரிதாக வந்துகொண்டிருந்தது. கரையில் நிறைய மரங்கள் கிடந்தன எதற்கு என்று தெரியவில்லை. கடற்கரைக்கு சென்றதும் முதலில் செய்த காரியும், கடற்கரை மணலில் பெயர் எழுதியது, சில நிழற் படம் எடுத்தது. இது சுனாமி வர வாய்ப்புள்ள இடமாம். அங்கேயே மழையில் நனைந்தபடி எடுத்து வந்திருந்த மதிய உணவை முடித்து கொண்டோம். நான்கு மணியளவில் இருட்ட தொடங்கியதால் தங்க ஏற்பாடாயிருந்த விடுதிக்கு சென்றோம். Forks என்னும் இடத்தில் இருந்த அழகான, வசதியான விடுதியில் தங்கினோம். இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டோம்.

Kalaloch கடற்கரை


அடுத்தநாள் நாங்கள் சென்ற முதல் இடம், crescent ஏரி. இந்த ஏரியின் இரு பக்கமும் மலைகள் இருந்தன. மலையை ஒட்டி இருந்ததால் ஒரு தனி அழகுடன் இருந்தது. இந்த ஏரியில் கோடை காலத்தில் படகு பயணம் செய்வார்கள், குளிர் காலம் என்பதால் யாரும் தட்டுபடவில்லை. மலையோரத்தில் சில வீடுகள் இருந்தன, கோடை காலத்தில் தங்குவதற்காக இருக்கலாம்.

Crescent ஏரி


கடைசியாக நாங்கள் சென்ற இடம், பெரும்பான்மையோர் எதிர்பார்த்து கொண்டிருந்த Huricane Ridge என்னும் பனி மூடிய மலை. 5200 அடி உயரம். மலைக்கு மேலே செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. முன்தினம் பனி அதிகம் பொலிந்திருந்ததால், வழியெங்கும் பனி கொட்டிக்கிடந்தது, போக்குவரத்து சவுகரியத்துக்கு, சாலையில் இருக்கும் பனியை ஒதுக்கும் வண்டிகள் நிறுத்தப்படிருந்தன. வழியில் சில View pointகள் இருகின்றன. ஒரு குறிப்பிட்ட view pointல் இருந்து தெளிவான வானம் இருக்கும் போது பார்த்தால் கனடா தெரியுமாம். நாங்கள் சென்ற போது ஓரளவு தெளிவான வானம் தான் என்றாலும் கனடா தெரியவில்லை, கோடை காலத்தில் தெரியலாம். மலை உச்சியை அடைந்தவுடன் அனைவரும் பணியில் விளையாட ஆரம்பித்துவிட்டோம், ஒருவர் மீது ஒருவர் பனி எறிவதும், பணியில் டைவ் அடிப்பதும் என கைகள் எரியும் வரை விளையாடினோம், கையுறை போடாமல் பணியில் அதிகநேரம் தாக்குபிடிக்க முடியாது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் பலர் பனி சறுக்கு செய்து விளையாடி கொண்டிருந்தனர்.

Hurricane Ridge


காடுகளில் பல இடங்களில் காட்டிற்குள் செல்ல trailகள் உள்ளன, கோடைகாலம் இந்த காடுகளுக்குள் சுற்றுவதற்கு சரியான நேரம். கேம்ப் அமைத்து கொஞ்ச நேரம் இயற்கையுடன் தங்கி இருக்கலாம், குளிர் காலத்தில் இதெல்லாம் கஷ்டம். காடு மலைகளை இங்கு மிக சிறப்பாக பாதுகாக்கின்றனர், ஆங்காங்கே, என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருகின்றனர். குப்பைகளை போடுவது குற்றமாக கருதப்படுகிறது, பிடித்தால் அபராதம் விதிப்பார்கள். காடு மலைகளின் முக்கியத்துவம் கருதி, சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

அங்கிருந்து dungeness bay செல்லலாம் என்று கிளம்பினோம், நாங்கள் அங்கு சென்று சேர அதிக நேரம் ஆனதால், பார்க்க முடியவில்லை, ஆகவே வீட்டிற்கு கிளம்பினோம். GPSல் வீட்டு விலாசத்தை இட்டுவிட்டு கிளம்பினோம் அது எங்களை ஒரு துறைமுகத்துக்கு இட்டு சென்றது, என்னடா வம்பென்று, வேறொரு வழி கேட்டதற்கு (Detour), காட்டியது, கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் தெரிந்தது வேறொரு துறைமுகத்துக்கு அழைத்து செல்கிறது என்று, பின்பு GPS செட்டிங்கில் மாற்றம் செய்து, தரை வழியில் மட்டுமே அழைத்துபோக சொன்ன பிறகு, தரை வழியில் ஒரு மணி நேரம் தாமதமாக வீடு வந்தோம். எந்த ஒரு பயணத்திலும் நாம் அதிகம் விரும்புவது பார்க்கும் இடங்களை விட, அந்தப் பயணம் நேரம். இந்த பயணமும் அழகு, பார்த்த இடங்களும் அழகோ அழகு.

4 comments:

அண்ணாமலையான் said...

goog one...

malarvizhi said...

superb clicks . very nice description.

Annamalai Swamy said...
This comment has been removed by the author.
Annamalai Swamy said...

Thanks Annamalaiyaan.

Thanks Malarvizhi. These pics are from google.Unfortunately I didnt have the pics captured by us with me while posting this article.