Monday, 13 July 2009

சுட்டிக் குழந்தை

கடந்த வாரம் ஊருக்கு சென்ற போது எனக்கும் ஐந்தாவது படிக்கும் என் அக்கா மகளுக்கும் (ஹரிணி) நடந்த உரையாடல்.
பள்ளி மதிய உணவுக்கு கண்டிப்பா தேங்காய் சட்னி கல்லில் அரைத்து தர வேண்டும் என்று (என் அம்மா மிக்ஸ்யில் அரைத்து வைத்திருந்தார்) அடம் பண்ணி கொண்டு இருந்தவளிடம்
நான்: நானெல்லாம் பள்ளிக்கு போகும் போது எங்க அம்மா என்ன கொடுத்தாலும் எதுவும் சொல்லாம எடுத்துட்டு போவேன் நீயேன் இப்படி அடம் பிடிக்கிற?
ஹரிணி: அது அறியாத வயசு இது அறிஞ்ச வயசு அதான்
நான்: !@#$%^^? (ஒக்காந்து யோசிப்பாங்களோ!)
நான் மேல பேச எதுவும் இல்லை, எனக்கு ஆச்சர்யம் அந்த பதில் மட்டுமல்ல அந்த பதில் வந்த விதம், நான் கேள்வியை முடித்த அடுத்த விநாடி அவளிடம் இருந்த இந்த பதில். இக்கால குழந்தைகள் எவ்வளுவ்வு சுட்டிய இருக்கிறார்கள்.

இந்த முறை அவள் எனக்கு அபகஸ் முறையில் எப்படி கூட்டல் கழித்தல் செய்வது என்று கற்றுத்தந்தாள். எளிமையாக தான் இருந்தது. அனால் அவள் கொடுத்த Home workஐ தான் செய்யாமல் வந்து விட்டேன்.

2 comments:

Unknown said...

அண்ணாமலை... நீங்க இன்னும் அறியாத வயசிலே தான் இருக்கீங்களா??? அப்போ டிபன் பாக்ஸிலே அம்மா போட்டு தரும் எதுவும்... இப்போ அம்மா பார்க்கும் பெண்... அவ்ளோ தான் வித்தியாசமா? இல்லை வளர்ந்துட்டீங்களா????

Ananya Mahadevan said...

superb.. kids are real smart now a days.. but idhellam mini bulbu annamalai.. adhum kuzhandhai kitta.. cha cha...