Sunday, 26 July 2009

ஆறு கொலையும் ஒரு தீர்ப்பும்

இந்த வாரம் சஞ்சீவ் நந்தா Hit and Run வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடைசி தீர்ப்பை வழங்கிருகிறது. சஞ்சீவ் நந்தா BMW Hit and Run கேஸ் பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்கும். பத்து வருடங்களுக்கு (1999) முன் சங்கீவ் நந்தா தன்னுடைய BMWவில் ஒரு அதிகாலை பொழுதில் ஒரு காவல் சோதனை கூடத்தின் அருகில் 6 பேரை ஏற்றி கொன்றிருக்கிறார். அதில் மூன்று காவல் துறையினரும் "அடக்கம்". இந்த விபத்து நடக்க காரணம் நந்தா குடித்து விட்டு வண்டியை வேகமா ஒட்டி வந்தது தான். அன்று அவருடைய நண்பரும் உடனிருதிருகிறார், விபத்துக்கு பிறகு அவருடைய நண்பன் வீட்டிக்கு சென்று வண்டியை சுத்தம் செய்து விட்டு கிளம்பிவிட்டனர்.

வண்டியின் ஆயில் கசிவ்வு மற்றும் நம்பர் பிளேடின் ஒரு பகுதி விபத்து நடந்த இடத்தில் கண்டேடுகப்பட்டத்தை வைத்து சஞ்சீவ் நந்தா நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டார், முதல் கட்ட விசாரணையில் சுனில் என்பவர் முதலில் விபத்தை பார்த்ததாக தானாக வந்து சாட்சி சொன்னவர் பின்னர் விலைக்கு வாங்கப்பட்டதலும், அந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் கார் அவர்களை மோதவில்லை என்றும் லாரி தான் மோதியது என்று கூறியதாலும் நம் ஜனநாயக சட்டப்படி குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் முக்கியமான விசையம் சஞ்சீவ் நந்தாவின் அப்பா ஒரு ஆயுத வியாபாரி மற்றும் அவருடைய தாத்தா கடற்படை தளபதியாக இருந்தவர்.

இந்த தீர்ப்பு யாராலும் நம்பமுடியததாலும் நம் மீடியாக்கள் இந்த சம்பவத்தை பூதகரமாக்கியதாலும் மறு விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த முறை விசாரணையில் இவர் குற்றவாளி என்று கண்டுபிட்டிகப்பட்டு செப்டம்பர் 5 2008 அன்று
Culpable Homicide பிரிவின் கீழ் (IPC - 304A-ஈ) ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. Culpable Homicide என்றால் "Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide".
ஒருவழியாக நம் ஜனநாயகம் ஒரு அளவுக்கு ஜெய்தது என்று நாம் கொஞ்சம் நம்பிக்கையில் இருந்த பொது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செயப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் (என்ன பெயர்!!!) trail கோர்ட்டில் இவர் தவறான செக்சனில் குற்றஞ் சாட்டப்பட்டார் என்றும் அவரை நியாயமாக(?) 304A. Causing death by negligence என்ற செக்சனில் மட்டுமே தண்டிக்க முடியும் யன்றும் அதனால் முன்பு அளிக்கப்பட்ட 5 வருட சிறை தண்டனையை 2 வருடமாக குறைத்து தீர்ப்பளித்திருக்கிறார். Causing death by negligence என்றல் " Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both."
என்னால் இந்த தீர்ப்பை புரிந்து கொள்ளவோ ஒத்துகொள்ளவோ முடியவில்லை, இந்த வழக்கில் கீழ் கொடுத்துள்ள அணைத்து குற்றங்களும் அடங்கியிருப்பது சட்டம் படித்த படிக்காத அனைவருக்குமே புரியும்
1. குடித்துவிட்டு வண்டி ஒட்டியது
2. வேகமா வண்டி ஓட்டியது.
3. விபத்துக்கு பிறகு காவல் துறையிடம் தகவல் அளிக்காதது.
4. தடயங்களை அழித்தது.
5. சாட்சியங்களை அழித்தது.
6. அனைத்துக்கும் மேலாக ஆறு பேரை கொன்றது.
சட்டம் படித்தவர்களுக்கு இதில் இன்னும் என்னன குற்றங்கள் இருக்கிறது என்று நன்றாக தெரியும். ஆறு பேரை குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டி கொன்றதற்கு கவனகுறைவால் நடந்தது என்று சிம்பிளா தீர்ப்பு சொல்லிவிட்டார் நம் நீதிபதி. கவனமாக ரசித்து கொன்றால் தான் நிறைய தண்டனை தருவார்கள் போல, ஆக தண்டனை குறைவாக கிடைக்க "கொலையெல்லாம் plan பண்ணாம பண்ணனும் ஓகே" .

இதேபோல் குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டி ஒரு முதல்வரையோ, பிரதமரையோ அல்லது இந்த நீதிபதிக்கு சொந்தமனவரையோ கொன்றிருந்தால் இதே தீர்ப்பைதான் வழங்குவார்களா நம் நீதியை காப்பாற்றும் கனவான்கள்? நன் தேசத்தில் ஒரு வழக்கும் தீர்ப்பும் அதில் சம்பந்த பட்டிருக்கும் நபர்களின் வசதி வாய்ப்பை பொறுத்து தான் அமைகிறது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சாட்சி. எவன் வலிமயுடயவனோ அவன் ஜெயிக்கிறான். அதனால் தானோ சமீபத்தில் நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிடவேண்டும் என்ற அரசு ஆணையை அனைத்து நீதிபதிகளும் ஒற்றுமையாக எதிர்த்து அதை செயல்படுத்த முடியாமல் செய்துவிட்டனர்.ஜெய் பாரத மாத!.

நீதிமன்றத்தில் நீதிதேவி கண்களை மூடியிருக்கும் துணியை இனிமேல் நீதிபதிகளின் கண்களில் தான் கட்ட வேண்டும் போல அல்லது அதே துணியை எடுத்து நம் கண் காது வாய் என்று அனைத்தையும் மூடிக்கொள்ளலாம். நம் சட்டமும் நீதியும் ஒழுங்காக கடைபிடிக்கப்படிருந்தால் ஜெயிலில் அடைந்து கிடக்க வேண்டிய பலர் இன்றும் நம் நாடளாமன்றத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்சி செய்துகொண்டிருக்க மாட்டார்கள். வாழட்டும் நம் ஜனநாயகம்.

No comments: