Saturday 8 August 2009

குமுதத்தின் சொதப்பல் பட்டியல்

5.8.2009 தேதியிட்ட குமுதத்தில் விக்ரமுடன் மோதும் ஜீவன் என்று ஒரு கட்டுரை வெளியானது அதில் விக்ரம் நடித்து வெளிவரும் கந்தசாமியும் ஜீவனின் கிருஷ்ணா லீலையும் ஒரே ஒன்லைனை அடிபடையாக கொண்டு வெளிவருவதாக கூறுகிறது அந்த கட்டுரை, இந்த இரு படங்களின் கதைகளும் ஒன்றா இல்லையா என்று படம் வந்ததும் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையில் அவர்கள் தமிழ் திரையுலகில் கதை பஞ்சம் என்றும் அதனால் பல ஹிட்டான ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு நம் இயக்குனர்கள் படம் எடுகின்றனர் என்றும் கூறுகிறது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை, இந்த கட்டுரையின் ஒரு பகுதியாக ஒரு பட்டியலை வெளியிடிருகிறார்கள் அது எந்த ஹாலிவுட் படத்தை சுட்டு என்ன தமிழ் படம் வந்திருக்கிறது என்று, பிரச்சனை இதுதான்.இந்த பட்டியலில் 17 படங்கள் இடம்பெற்றிருகின்றன "இது ஒரு சாம்பிள் தான், பட்டியல் இன்னும் நீளம்" என்ற குறிப்புடன்.

ஹாலிவுட் படங்களின் கதைகளை அப்படியே தழுவியோ அல்லது அதை ஒரு Inspiration ஆக வைத்தோ பல படங்கள் வந்திருகின்றன வருகின்றன அதை மறுப்பதற்கு இல்லை. இவர்கள் வெளியிட்டிருக்கும் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்த பட்டியலில் ஹாலிவுட் படங்களை ஒரிஜினல் என்றும் அத்துடன் ஒப்பிடப்படிருக்கும் தமிழ் படத்தை சுட்டவை என்றும் குறிப்பிடிருகின்றனர். ஆக அவர்கள் அந்த பட்டியலில் குறிப்பிடிருக்கும் அணைத்து தமிழ் படங்களும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை (அது யாருக்கு வேண்டும் என்கிறீர்களா?). இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில படங்களை பற்றி கிழே.

மகாநதி:Hardcore
மகாநதி கமல் ஹாசனின் ஒரு முக்கியமான படம். அது ஒரு வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. கிராமத்தில் வசதியாக வாழும் கமலை ஹனீபா தான் நடத்தும் சிட்பண்டு தொழில் சேர்த்து கொண்டு அவரை ஏமாற்றிவிடுகிறார். அதனால் ஜெயிலில் அடைக்கப்படும் கமல் பிறகு வெளியே வரும்போது தன் சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார். தன் மகளை ஒரு விபச்சார விடுதியில் கண்டுபிடித்து மீட்கிறார். பிறகு இந்த நிலைக்கு காரணமானவர்களை கொன்று விட்டு மீண்டும் ஜெயிலுக்கு போகிறார். இந்த படத்தை இயகியிருப்பவர் சந்தான பாரதி.

Hardcore என்ற ஆங்கிலப்படத்தின் கதை, ஒரு தொழிலதிபர் காணமல் போன தன்னுடைய மகளை தேடுகிறார். தேடல்களுக்கு பிறகு அவர் மகளை ஒரு ஆபாச படமெடுக்கும் கும்பலிடமிருந்து மீட்கிறார்.எந்த வகையில் இந்தப்படத்தை பார்த்து மகாநதி எடுத்திருப்பார்கள் என்று குமுதம் தான் விளக்க வேண்டும். இந்த இரு படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த கதை நாயகர்களின் மகள்கள் ஆபாசமான தவறான செயலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது மட்டுமே, இதை மட்டும் வைத்துக்கொண்டு மகாநதி Hardcore என்ற படத்தை சுட்டு எடுத்தது என்றால் மடத்தனம்.

அபூர்வ சகோதரர்கள்:The Corsican Brothers
The Corsican Brothers படத்தில் கொலை செய்யப்பட தங்களது பெற்றோர்களை சிறு வயதிலேயே பிரிக்கப்பட்ட சகோதரர்கள் 20 வருடம் கழித்து சேர்ந்து கொலையாளிகளை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை.

அபூர்வ சகோதரர்கள் படமும் கிட்ட தட்ட இதே போல் ஒரு கதைதான் என்றலும் பல வேறுபாடுகள் இருகின்றன ஆங்கில படத்தில் குள்ள ஹீரோவெல்லாம் இல்லை. இதில் நம் குள்ள கமல் தான் பழி வாங்குகிறார் இன்னொரு கமல் அதன் மூலம் வரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கடைசியில் அனைவரும் ஒன்று சேருகின்றனர். இருபடங்களுக்கும் ஒரே ஒற்றுமை இரண்டும் தன் பெற்றோரை கொன்றவர்களை பழி வாங்கும் கதை, இதை அடிபடையாக வைத்து பல மொழிகளிலும் பல படங்கள் வந்துவிட்டன இன்னும் வரும். இந்த படத்தின் சிறப்பு குள்ள கமல் தான், அந்த கதாப்பாத்திரத்தை எப்படி படமாக்கினார் என்பது இன்னும் பலருக்கு தெரியாது.

விருமாண்டி:Life of David Gale
Life of David Gale இந்த படத்தின் நாயகன் மரண தண்டனைக்கு எதிராக போராடுகிறார், ஆனால் அவரே ஒரு கொலை குற்றத்தில் மாட்டி மரண தண்டனை விதிக்கப்படுகிறார். அவரை மரண தண்டனைக்கு சில நாள் முன் பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் (Kate Winslet) வருகிறார் அவருக்கு சில ஆதாரங்கள் கிடைக்க அவர் மேலும் துப்பறிந்து நாயகனை நிரபராதி என்று நிருபித்து விடுதலை செய்கிறார்.

விருமாண்டியில் ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கையாளரிடம் நடந்ததை அவரவர் பார்வையில் கூறுகின்றனர். இந்த படத்தில் முதன்மையாக கூறப்பட்டிருப்பது விருமாண்டி, கொத்தாளன் மற்றும் நாய்கர் இடையே நடக்கும் சண்டையும் சூதும் தான், இந்த படத்தின் ஆரம்பத்திலும் முடுவிலும் மட்டுமே மரணதண்டனைக்கு எதிராக பேசுகிறார்கள். இது மட்டும் தன் இந்த படத்துக்கும் Life of David Gale படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் அதற்காக விருமாண்டியை இந்த படத்தை பார்த்து கமல் எடுத்தார் என்பதெல்லாம் ஒத்துகொள்ள முடியவில்லை.

இந்த மாதிரி இரு படத்திற்கும் சிறு ஒற்றுமையை வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்து அந்த படம் எடுக்கபட்டது என்பது ஏற்புடையதல்ல. அப்படி பார்த்தால் இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு காட்சியோ இல்லை எதாவது ஒன்றோ வேறேதோ படத்தில் இருக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம் நம் பட்டியலில் எல்லாம் இடம் பத்தாது.

இந்த மாதிரி சின்ன ஒற்றுமைகள் (தமிழ் படத்தில் இருப்பவை) ஆங்கில படத்திலும் இருக்கும். உதாரணமாக உலகமே போற்றிய Titanic படத்தில் ஒரு ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல் வருவதும் பின்னர் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் காட்டப்பட்டிருக்கிறது. நம் தமிழ் சினிமாவில் இதை அடிப்படியாக கொண்டு பல படங்கள் வந்துவிட்டன, அதனால் Titanic படத்தை தமிழ் படத்தை பார்த்து எடுத்தனர் என்று சொல்லலாமா என்ன? இது மாதிரி பல உதாரணங்கள் கிடைக்கும்.

எல்லா மொழிகளிலும் வேறொரு மொழிப்படத்தை தழுவியோ அல்லது Inspiration ஆக கொண்டோ படங்கள் வந்து கொண்டுதான் இருகின்றன, அப்படி எடுக்கப்படும் படங்கள் பார்பவர்களுக்கு எதாவது ஒரு செய்தியோ மகிழ்ச்சியோ தரும் வரைக்கும், அவர்கள் எடுக்கும் படத்தை சொதப்பாத வரைக்கும் எந்த தவறும் இல்லை (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல).

குமுதம் போன்ற பலமான வாசகர் வட்டம் உள்ள ஏடுகளில் எந்த ஆராய்ச்சியும் ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் ஒரு பட்டியலை வெளியிடுவது அழகில்லை. இதை படிப்பவர்களுக்கு நம் படைப்பாளிகள் மேல இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும். முடிந்தால் பல விசயங்களை ஆராய்ந்து ஒரு தரமான பட்டியலை வெளியிடலாம் இல்லையேல் அந்த பக்கத்தில் ஒரு கவர்ச்சி படம் போட்டு நிரப்பி விடுங்கள் யாருக்கும் தொல்லையில்லை.

10 comments:

Ragu said...

Malai,
Chanceless,,,,
Pinnalllll!!!!
Great!!! No Words!!!

Unknown said...

Annamalai, Antha 17 padathoda list kudutha nalla irukkum. Kumudham seyyada aaraichiya nan seyallam-nnu irukken. :-).

தம்பி... said...

அருமையான பதிவு..

Rajasekaran said...

But I can give some real examples for the movies which are copied frame-by-frame from hollywood movies.

1) Visil from Urban legend
2) Suryaparvai from Leon

kumar said...

நல்ல போட்டீங்க ஒரு போடு.நானும் கொஞ்ச நாளா பாத்துக்கிட்டுதான் வரேன்.பதிவுலகத்திலும் இது போன்ற காமெடிக்கு பஞ்சமில்லை.தன்னோட மேதாவித்தனத்த காட்ட இது ஈரானிய படத்த பாத்து சுட்டது,இது ஸ்பானிஷ் படத்த பாத்து சுட்டதுன்னு ஒரே அலப்பறை.படம் ரசிக்குறமாதிரி மாதிரி இருக்கா ஓகேன்னுட்டு போக வேண்டியதுதானே.சமீபத்துல வந்த 4777 படம் எனக்கு உள்ள படியே புடிச்சிருந்தது.ஆனா இந்த மேதாவிங்களோட வேலை அதோட ரிஷிமூலம் தேடிக்கிட்டு அல்லாட வேண்டியது.

வழிப்போக்கன் said...

நல்ல ஆய்வு..

Anonymous said...

Nice!!!!!!!!!

குப்பன்.யாஹூ said...

Nice post, very well done. I appreciate your analysis and cinema interest.

Ananya Mahadevan said...

நிச்சியமாக சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். மிகச்சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்
The corsican brothers நாளை நமதே படம் மாதிரி அல்லவோ இருக்கிறது? அதை விட்டுட்டாங்க போல இருக்கு - பல விதத்தில் புதுமையாக எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் தான் இவங்க கண்ணுக்கு தெரிஞ்சதா?

Life of David Gale நான் பார்த்துள்ளேன்
சத்தியமாக அதற்கும் விருமாண்டிக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.

நான் குமுதம் படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டன
நான் குமுதம் படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டன

Ganni said...

மலை... மிக அருமையான பதிவு!
நாம இப்ப பண்ணிக்கிட்டு இருக்கும் நிறைய விஷயங்கள் மேலை நாட்டவர்களிடம் காப்பி அடித்தது தான்.
யாருக்கு தெரியும்..? குமுதம் பத்திரிகை காரங்க வேறு எந்த பத்திரிக்கையை பார்த்து செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடுகிரார்களோ!!!